கோப்பாய் பாடசாலை முன் பெற்றோர் போராட்டம்..!!!


யாழ்ப்பாணம் - கோப்பாய் வடக்கு, றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரியர்களின் அசண்டையீன செயற்பாடுகள் வள பற்றாக்குறைகள் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடசாலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் , சில மணி நேரம் பிரதான வீதியை மறித்தும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

நீண்ட காலமாக பாடசாலை பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வரும் நிலையில் அதிகாரிகள் அது தொடர்பில் கவனம் செலுத்த வில்லை எனவும் , இவ்வாறு பல்வேறு குறைப்பாடுகளுடன் வள பற்றாக்குறைகளுடன் பாடசாலை இயங்கி வருவதனால் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்பட்டு , அவர்களின் எதிர்காலம் நிச்சயமற்ற தன்மையாக காணப்படுவதாக பெற்றோர் கவலை தெரிவித்தனர்

Previous Post Next Post


Put your ad code here