யாழில். கணவன் உயிரிழந்த சோகம் - மனைவி உயிர்மாய்க்க முயற்சி..!!!
யாழ்ப்பாணத்தில் கணவன் உயிரிழந்த சோகத்தில் மனைவி தனது உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில் உறவினர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை பகுதியை சேர்ந்த சிவனேஸ்வரன் சிறிதாஸ் (வயது 26) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 22ஆம் திகதி திடீர் சுகவீனம் காரணமாக பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் , சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.
கணவன் உயிரிழந்த செய்தியை கேள்வியுற்றதும் மனைவி தனது உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில் உறவினர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.