உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கைகள் - நாளை காலைக்குள் ஜனாதிபதி வெளியிடவேண்டும் - உதய கம்மன்பில..!!!


ஜனாதிபதி நாளைக்குள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இரண்டு விசாரணை அறிக்கைகளையும் வெளியிடவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில காலக்கெடுவிதித்துள்ளார்.

ஜனாதிபதி உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பான இரண்டு அறிக்கைகளை பகிரங்கப்படுத்த தயங்குகின்றார் ,அந்;த அறிக்கைகளை வெளியிடுவதற்காக நான் ஜனாதிபதிக்கு வழங்கிய காலக்கெடு நாளை காலை பத்துமணியுடன் முடிவடைகின்றது என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

நாளைகாலைக்குள் ஜனாதிபதி அறிக்கைகளை வெளியிட்டு அரசமைப்பின்படி தனக்குள்ள கடமைகளை நிறைவேற்றலாம் ஆனால் அவர் அவ்வாறு செய்ய தவறினால் அரசியல் குற்றவியல் பிரேரணையை எதிர்கொள்ளவேண்டிவரும் என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

அரசமைப்பின் சில பிரிவுகளை ஜனாதிபதி மீறினால் அறிக்கைகளை வெளியிட தவறினால் நான் அவற்றை பகிரங்கப்படுத்துவேன் என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here