Monday, 25 November 2024

இன்றைய ராசிபலன் - 25.11.2024..!!!

SHARE


மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இன்று பொறுமையோடு நடந்து கொள்வீர்கள். பக்குவம் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். உங்களுடைய நிதானம் நிறைய நல்ல விஷயங்களை வாழ்க்கையில் கற்றுக் கொடுக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். புரிந்து கொள்ளாத எதிரிகள், வாழ்க்கை துணை கூட உங்களை புரிந்து கொண்டு நல்ல விதமாக நடந்து கொள்வார்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உண்மை மட்டும் தான் நல்லது செய்யும். நேர்மையாக நடந்து கொள்வீர்கள். அடுத்தவர்களுடைய தவறான பாதையைக் கூட மாற்றி நல்வழிப்படுத்துவீர்கள். உங்களால் இரண்டு பேர் வாழ்வு இன்று நலம் பெறும். மனதில் நிம்மதி பிறக்கும். சுப செலவுகள் ஏற்படும். வேலையும் தொழிலும் நினைத்ததை விட நல்லபடியாக செல்லும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சிந்தனைகள் இருக்கும். வார துவக்க நாளே சில பல சிக்கல்களை உண்டாக்க கூடும். கவலைப்படாதீங்க, இறைவனை நம்புங்கள். கூடுதல் முயற்சியை மேற்கொள்ளுங்கள். சோம்பேறித்தனத்தை தள்ளி வையுங்கள். பொய் பேசாதீர்கள். அடுத்தவர்களை கண்டு பொறாமை படாதீர்கள். யார் எப்படி போனாலும் சரி, உங்களுடைய வேலைகளை நீங்கள் சரியாக செய்தால் நல்லது நடக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல விஷயங்கள் கைக்கூடி வரும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு சரியாகும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வீர்கள். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கடுமையான உழைப்பு இருக்கும். எப்படியாவது சில வேலைகளை முடித்தே ஆக வேண்டும் என்று முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இந்த நாள் இறுதியில் அதற்கான வெற்றியும் கிடைக்கும். கொஞ்சம் உடல் சோர்வு இருக்கும். நிறைய தண்ணீர் பருகுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நேரத்திற்கு சாப்பிடுங்கள். இறை வழிபாடு மனதிற்கு அமைதியை கொடுக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சோதனைகளை கடவுள் கொடுத்து வேடிக்கை பார்ப்பான். வேலையிலும் தொழிலிலும் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். பிரச்சனைகளை சமாளித்தாலும் ஏதோ மனது சஞ்சலமாகவே இருக்கும். இறை வழிபாடு ஒன்று மட்டும் தான் இன்று உங்களுக்கு மனநிறைவை கொடுக்கும் பார்த்துக்கோங்க.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு அமோக வரவேற்பு இருக்கும். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். மேல் அதிகாரிகளுடன் நல்லிணக்கம் ஏற்படும். நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும். வீட்டில் இருப்பவர்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் இருக்கும். உங்கள் உடன் இருப்பவர்களே உங்களை வாழ்க்கையில் முன்னேற விடமாட்டார்கள். சில நண்பர்கள் கூட எதிரியாக மாறலாம். பொறுமையாக இருங்கள். யார் எப்படி போனாலும் பரவாயில்லை. நீங்கள் நேர்வழியோடு நடக்க வேண்டும். குறுக்குப் பாதையை வாழ்க்கையில் தேர்ந்தெடுக்கக் கூடாது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மன உறுதி இருக்கும். எடுத்த காரியத்தை முடித்துக் காட்ட வேண்டும் என்று தீவிரமாக வேலை செய்வீர்கள். யாருக்கும் பயப்பட மாட்டீர்கள். நேர்மையாக பேசுவீர்கள். நேர்மையாக நடந்து கொள்வீர்கள். இதனாலேயே புதிய எதிரிகள் உருவாக இன்று வாய்ப்புகள் இருக்கிறது. உங்களுடைய மன உறுதி உங்களுடைய தைரியம் வாழ்க்கையில் வெற்றியை கொடுக்கும். இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கிறது.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று வார துவக்க நாளாக இருந்தாலும், ரிலாக்ஸ் ஆன நாளாக இருக்கும். நல்ல ஓய்வு கிடைக்கும். நல்ல சாப்பாடு கிடைக்கும். நிம்மதியாக இந்த நாளை நகர்த்திச் செல்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம். விருந்தாளிகளின் வருகை சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்யலாம் நல்ல லாபம் கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா விஷயத்திலும் கவனம் தேவை. கவனக்குறைவாக செய்யும் வேலைகள் உங்களுக்கு தேவையில்லாத பிரச்சினைகளை கொடுக்கும். நஷ்டத்தை கொடுக்கும். கவனம் இல்லை என்றால் வேலைக்கு போகாதீங்க. வியாபாரத்திற்கு செல்லாதீர்கள். வீட்டிலேயே இருந்து ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். அரைகுறை மனதோடு இன்று எந்த வேலையையும் கையில் எடுக்க வேண்டாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று புதிய நட்புகள் கிடைக்கும். நட்பினால் நல்லது நடக்கும். மனதில் ஏதாவது கெட்ட விஷயங்களை நீங்களே கற்பனை செய்து கொண்டு, அது நடந்து விடுமோ, என்ற தயக்கத்தில் இருப்பீர்கள். அப்படியெல்லாம் எதுவும் இல்லை. மனதில் எதிர்மறையாக நினைப்பதை நிறுத்திவிட்டு நேர்மறையாக சிந்தித்தால் வாழ்க்கையில் முன்னேறலாம்.
SHARE