மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதியான நாளாக இருக்கும். பிரச்சனைகள் தானாக உங்களை விட்டு விலகும். வேலையிலும் தொழிலிலும் நிம்மதியாக இருப்பீர்கள். எதிரி தொல்லை இருக்காது. போட்டி பொறாமை இருக்காது. வருமானம் சீராக இருக்கும். செலவுக்கு ஏற்ப கையில் பணம் இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற நண்பர்களின் மூலம் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. வாழ்க்கையில் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். குறுக்கு வழியை தேர்ந்தெடுக்காதீர்கள். புது மனிதர்களை நம்பி எந்த முயற்சியும் செய்ய வேண்டாம். குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று புகழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்ற பாதையில் செல்வீர்கள். உங்களை ஊக்குவிப்பதற்காக ஆசிரியர்களும் பெற்றோர்களும் உறுதுணையாக இருப்பார்கள். வீட்டில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். கடன் சுமை குறையும். நிதி நிலைமை சீராகும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் அமைதியான நாளாக இருக்கும். எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. சாந்தமாக உங்களுடைய நாளை நகர்த்தி செல்லலாம். புது முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். இறை வழிபாட்டில் மனது ஈடுபடும். வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கும். வேலை விஷயத்தை கொண்டு வந்து வீட்டில் டென்ஷன் காட்டக்கூடாது. மனைவியை அனுசரித்து செல்லுங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயத்தின் மூலம் வேலைகள் சரியாக நடக்காது. நேரம் வீணாகும். பிரச்சனையை நினைத்து புலம்புவதை விட்டுவிட்டு, என்ன செய்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று சிந்தியுங்கள். போனது போகட்டும். பழைய விஷயங்களை பேச வேண்டாம். புது வாழ்க்கை பயணத்தை நிம்மதியாக தொடருங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பிரச்சனைகள் பல ரூபத்தில் வரும். சமாளிக்க முடியாத சூழ்நிலை இருக்கும். இருந்தாலும் இறைவன் உங்களை கைவிட மாட்டான். பலவிதமான அனுபவங்களை கற்றுக் கொள்வீர்கள். வாழ்க்கை என்றால் என்ன என்பதை உணரும் அளவுக்கு பல திருவிளையாடல்களை கடவுள் இன்று நிகழ்த்த வாய்ப்புகள் இருக்கிறது. கவனத்தோடு இருக்கவும் எந்த காரணத்தை கொண்டு மனம் உடைந்து போகாதீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிகாரர்களுக்கு லாபம் நிறைந்த நாளாக இருக்கும். தொழிலில் புதிய முதலீடு செய்யலாம். புது தொழில் துவங்கலாம். தொழிலை விரிவு படுத்தலாம். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். உங்களுக்கான வேலை பளு கொஞ்சம் அதிகரிக்கும். சில பேருக்கு வேலை மாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது. புது மாற்றங்களை இன்று சந்திக்கலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக்கூடிய நாளாக இருக்கும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். நீண்ட நாள் போராடிய விஷயங்களை இன்று ஜெயித்துக் காண்பிப்பீர்கள். அவமானங்கள் எல்லாம் பாராட்டுகளாக மாறும். நீண்ட நாள் பட்ட கஷ்டத்திற்கு இன்று பலன் நிச்சயம் உண்டு.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்துக் கொண்டிருக்கிறது. யோகம் நிறைந்த நாளாக இருக்கும். வராத பணம் கையை வந்து சேரும். கிடைக்காது என்று நினைத்த வாழ்க்கை கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். வேலை தொழில் எல்லாம் பிரச்சனையில் இருந்து விடுபட்டு நல்லபடியாக செல்லும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற செலவுகள் இருக்கும். சேமிப்பு கரையும். வீட்டில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வர வாய்ப்புகள் இருக்கிறது. பிள்ளைகளுடைய எதிர்காலத்தை கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள். முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அதிகம் பேசாதீர்கள். இறை வழிபாடு செய்வது இன்று மனதிற்கு கொஞ்சம் நிம்மதியை கொடுக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். தேவையற்ற டென்ஷன் இருக்கும். குடும்பத்தில் வாக்குவாதம் ஏற்படும். நிதி நிலைமை மோசமாக இருக்கும். இறை வழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும். இன்று மாலை கொஞ்சம் பிரச்சனைகள் எல்லாம் தணிந்து மனதிற்கு சந்தோஷம் கிடைக்கும். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செல்லுங்கள்.