கொழும்பு, இராஜகிரிய ஒபேசேகரபுர பிரதேசத்தில் உள்ள வாகனம் பழுதுபார்க்கும் இடமொன்றில் இன்று வெள்ளிக்கிழமை (01) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
வாகனம் பழுதுபார்க்கும் இடத்திற்கு அருகில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு வரையும் தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கோட்டை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Tags:
sri lanka news