யாழ் . போதனா வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர்..!!!




யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் மிக விரைவில் நேரில் விஜயம் மேற்கொண்டு , சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்வார் என கடற்றொழில் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

யாழ் . போதனா வைத்தியசாலைக்கு நேற்று சனிக்கிழமை நேரில் விஜயம் மேற்கொண்ட கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வைத்தியசாலையின் சேவை நிலைமைகளை நேரில் ஆராய்ந்தார்.

வைத்தியசாலையின் வளர்ச்சி மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான தேவைகளை வைத்திய சாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தியிடம் நேரடியாக கேட்டறிந்த அவர், சாதகமான மாற்றங்களை கொண்டுவர சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி, தன்னால் முடிந்த எல்லாவற்றையும் மேற்கொள்ளவதாக உறுதி அளித்தார்.

அத்துடன், சுகாதார அமைச்சர் வைத்தியர்.நளின்த ஜயதிஸ்ஸ விரைவில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் இதன்மூலம் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான மேலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.















Put your ad code here

Previous Post Next Post