Tuesday, 26 November 2024

யாழ் . நோக்கி வந்த பேருந்து விபத்து - பெண்ணொருவர் உயிரிழப்பு..!!!

SHARE
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார்

பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புனேவ பிரதேசத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தற்போது பெய்து வரும் மழை காரணமாக வீதியில் வழுக்கும் நிலைமை காணப்பட்டதால் விபத்து ஏற்பட்டுள்ளது என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண்ணின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விபத்து சம்பவம் தொடர்பில் புனேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE