திருகோணமலை தனியார் வைத்தியசாலை ஒன்றில் பெண்ணொருவர் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலைச் சம்பவம் இன்று(05.11.2024) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய குறித்த பெண், தனது கணவருக்கு சொந்தமான வைத்தியசாலையின் மூன்றாவது மாடியில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்த நிலையியே கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, உயிரிழந்த 63 வயதுடைய பெண்ணின் கணவரது சகோதரரே இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸார் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், 55 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Tags:
sri lanka news