ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணையை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.
3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முறையாக நிறைவுறாததால் மனுக்கள் மீதான விசாரணையை எதிர்வரும் 16ம் திகதிக்கு ஒத்திவைத்து நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டது.
பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் குழுவினால் மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளில் மூன்று வினாக்கள் முன்கூட்டியே கசிந்தனையால் வினாத்தாள் பரீட்சையை மீண்டும் நடத்த உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
Tags:
sri lanka news