யாழில். இளம் தாய் உயிரிழப்பு..!!!


ஐந்து நாள் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். பருத்தித்துறையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் பருத்தித்துறை ஓடக்கரையைச் சேர்ந்த 33வயதுடைய சுரேஷ்குமார் ரஞ்சிதா என்பவரே உயிரிழந்தவராவார்.

கடந்த மூன்று தினங்களாக இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து பனடோல் உட்கொண்டுள்ளார். காய்ச்சல் குணமடையாத நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போது அவர் மயங்கியுள்ள நிலையில் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மரணம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமார் விசாரணைகளை மேற்கொண்டார்.
Previous Post Next Post


Put your ad code here