கிளிநொச்சியில் டிப்பர் விபத்து: படுகாயமடைந்த தாயும் உயிரிழப்பு.!!!



கிளிநொச்சியில் இடம்பெற்ற டிப்பர் விபத்தில் படுகாயமடைந்த தாயும் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி நகரில் கடந்த 25ஆம் திகதி நத்தார் தினத்தில் இடம்பெற்ற டிப்பர் - மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு வயதுக் குழந்தை சம்பவ தினமே உயிரிழந்திருந்தது.

தந்தை, தாய், மகள் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் நேற்று தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் சாவகச்சேரி கல்வயல் பகுதியைச் சேர்ந்த கஜன் யாழினி (வயது-34) என்ற இளம் தாயே உயிரிழந்தவராவார். தந்தையும் மூத்த மகளும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here