கிளிநொச்சியில் பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்.!!!



கிளிநொச்சியில் உள்ள பகுதியொன்றில் அறுவடை இயந்திரத்தை சுத்திகரித்த குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்றுமுன்தினம் (04.01.2025) கிளிநொச்சி, முரசுமோட்டை, கோரக்கன்கட்டு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அறுவடை இயந்திரத்தை நீரினால் கழுவி சுத்திகரிப்பில் ஈடுபட்ட தருணத்திலேயே இவ்வாறு மின்சாரம் தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த சம்பவத்தில் பரந்தன் பைரவர் கோவிலடியை சேர்ந்த 31 வயதான பிரான்சித் ரஜீவன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here