யாழில். கரையொதுங்கிய மிதவையில் இருந்து மீட்கப்பட்ட புத்தர் சிலைகள்..!!!


யாழ்ப்பாணத்தில் கரையொதுங்கிய மிதவையில் காணப்பட்ட 18 புத்தர் சிலைகளையும் மருதங்கேணி பொலிஸார் மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்கரையில் நேற்றைய தினம் புதன்கிழமை அதிகாலை வேளை மிதவை ஒன்று கரையதுங்கி இருந்தது.

குறித்த மிதவையில் புத்தர் சிலைகள் , தேங்காய்கள் உள்ளிட்ட பொருட்கள் காணப்பட்டன.

பர்மாவில் இறந்த பிக்குகளை (தேரர்களை) நினைவுகூறும் முகமாக இவ்வாறான சடங்கு முறையானது ஆரம்பகாலம் முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதாவது மிதக்கும் வீடுகளை தயார் செய்து அதற்குள் நினைவு கூறும் தேரர்களின் சிற்பங்களை/ படங்களை வைத்து அவர்களுக்கு படையலிட்டு கடலில் விடுவார்கள் அது எந்த கரையை அடைகின்றதோ அங்கே அவர்களது ஆன்மா சென்றடைகின்றது. என்ற ஐதீகம் பர்மிய பௌத்தர்களிடையே காணப்படுகின்றது.

அந்தவகையில், நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மிதக்கும் வீடானது பிக்கு ஒருவரை நினைவு கூறும் முகமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இப்பிக்குவின் சடங்குகளை செய்து மிதக்கும் வீட்டினை அமைத்து கடலில் விட்டோரின் விபரமும் பர்மிய மொழியில் உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
Previous Post Next Post


Put your ad code here