கணேமுல்ல சஞ்சீவவை புதுக்கடை நீதிமன்றத்தில் வைத்து கொலை செய்த கொலை சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஊடகங்களில் பரவும் அனைத்து புகைப்படங்களும் உண்மையானவை அல்ல என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
சில படங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.
எனவே, செயற்கை நுண்ணறிவு குறித்து ஓரளவு புரிதலுடன் தனது கருத்துக்களை வெளிப்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
Tags:
sri lanka news