யாழில் சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு 64 ஆயிரம் ரூபாய் தண்டம்..!!!


சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டு வரப்பட்ட சீன சொக்லேட் வகைகளை விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளருக்கு 64 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட , மானிப்பாய் பொது சுகாதார பரிசோதகர் கி.அஜந்தன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது , அனுமதியற்ற வகையில் இலங்கைக்குள் கொண்டு வரப்பட்டு , உரிய சுட்டு துண்டுகள் இன்றி சீன சொக்லேட் வகைகளை விற்பனைக்கு வைத்திருந்தமையை கண்டறிந்தனர்.

குறித்த சொக்லேட் வகைகள் , ஊசி (சிரிஞ்), ஊசி மருந்து மற்றும் சைனேட் குப்பி வடிவங்களில் காணப்பட்டுள்ளன.

அவற்றினை சான்று பொருட்களாக கைப்பற்றிய சுகாதார பரிசோதகர் , கடை உரிமையாளருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்.

குறித்த வழக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை , கடை உரிமையாளர் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவரை கடுமையாக எச்சரித்த மன்று 64 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.
Previous Post Next Post


Put your ad code here