பிள்ளைகள் வெளிநாட்டில்; யாழில் தந்தை விபரீத முடிவு..!!!


யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை (8) முதியவர் ஒருவர் மனவிரக்தியில் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் 5ஆம் குறுக்கு தெருவைச் சேர்ந்த வயது 86 வயதான முதியவர் ஒருவரே இவ்வாறு விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபரின் மனைவி ஏற்கனவே உயிரிழந்து விட்ட நிலையில் அவரது பிள்ளைகள் மூவர் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த முதியவர் சனிக்கிழமை (8) தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார்.

அவரது சடல மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேமகுமார் மேற்கொண்டார்.

இந்நிலையில் மனவிரக்தியில் முதியவர் உயிரை மாய்த்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here