விமானப் பணிப்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பயணி கைது..!!!


சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இரண்டு விமான பணிப்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற பயணி ஒருவர் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, அதுருகிரிய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்று (15) இரவு 10.00 மணியளவில் சிங்கப்பூரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

வருகையின் போது, சந்தேக நபர், அதிக குடிபோதையில் இருந்ததாகவும், விமானத்தில் பணிபுரியும் இரண்டு விமானப் பணிப்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகவும் கூறப்படுகின்றது.

அதன்படி, இரண்டு விமானப் பணிப்பெண்களும் விமானத்தின் விமானியிடம் சம்பவத்தைப் புகாரளித்ததைத் தொடர்ந்து, அது குறித்து கட்டுநாயக்க விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதும், சந்தேகநபர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க பொலிஸாரிடம் அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு விமான பணிப்பெண்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் சம்பந்தப்பட்ட பயணி நீர்கொழும்பு மருத்துவ பரிசோதகரிடம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார், அவர் அதிக அளவில் குடிபோதையில் இருந்ததை உறுதிப்படுத்தினார்.

இந்த சம்பவம் இலங்கை வான்வெளிக்குள் நடந்ததால், சந்தேக நபர் இன்று (16) கொழும்பு எண் 01 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here