மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். எந்த ஒரு வேலையிலும் தாமதம் செய்யக்கூடாது. வேலையை கையில் வைத்துக் கொண்டு, நேரத்தை வீணடிக்க கூடாது. கடமை முதலில் கண் முன்னே தெரிய வேண்டும். பிறகு மற்ற வேலைகளை எல்லாம் பார்த்துக் கொள்ளலாம். நேரத்தை இன்று நீங்கள் தவறவிட்டால் கஷ்டப்பட வேண்டி இருக்கும். ஜாக்கிரதை.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று புது முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். புது வேலை எதுவாக இருந்தாலும் இன்று துவங்கலாம். வீட்டிற்கு தேவையான உபயோகமான பொருட்களை வாங்கலாம். சுப செலவுகள் ஏற்படும். பெண்களுக்கு இன்று மனமகிழ்ச்சி இருக்கும் நாள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை நீங்கும். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் துவங்கும் புதிய முயற்சிகள் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். உங்களுடைய கடமைகளை சரியாக முடித்து மன நிம்மதியை அடைவீர்கள். வீட்டில் பொருளாதார நெருக்கடி விலகும். நிதி நிலைமை உயரும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். அன்றாட வேலைகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய கடமைகளை எல்லாம் சரியாக நேரத்திற்கு செய்து முடித்து விடுவீர்கள். சோம்பேறித்தனம் இருக்காது. வியாபாரத்தை பொருத்தவரை நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகளுக்கு உண்டான கடன் தொகைக்கு முயற்சி செய்யலாம். நீண்ட தூர பயணங்கள் நன்மையை கொடுக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். எதிரிகளோடு சண்டை போட்டு ஜெயித்து விடுவீர்கள். தலை குனிந்த இடத்தில் தலை நிமிர்ந்து நிற்பீர்கள். உங்கள் மீது விழுந்த பழியை விலக்கிவிடுவீர்கள். நல்ல பெயர் இன்று உங்களுக்கு கிடைக்கும். கெட்ட நண்பர்கள் உங்களை விட்டு தானாக விலகி விடுவார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். அடுத்தவர்களைப் பற்றி அவசியமாக சிந்திக்காதீர்கள். உங்களுக்கு எது நல்லது கெட்டது என்பதை சிந்திக்க தொடங்க வேண்டும். தேவையற்ற பிரச்சனைகள் வந்தாலும் உங்கள் மீது எந்த தவறும் இல்லை என்றால், நியாயத்தை பேசலாம். தைரியமாக பேசலாம். கோழைத்தனமாக இருக்கும் பட்சத்தில் வீண்பழி உங்கள் மீது விழ வாய்ப்பு உள்ளது. பார்த்துக்கோங்க.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று அமைதியாக ஓய்வு எடுத்துக் கொள்வீர்கள். வேலைகள் தானாக நடக்கும். வியாபாரம் தானாக நடக்கும். உங்களுக்கு நிம்மதி கிடைக்கும். சந்தோஷம் கிடைக்கும். வருமானம் வரும். இப்படி வரும் யோகமான நாள் வேறு யாருக்காவது கிடைக்குமா. உங்களுக்கு இன்று கிடைத்துவிட்டது. அனுபவித்துக் கொள்ளுங்கள். கடவுள் உங்களுக்கு இன்று சந்தோஷத்தை மட்டும் கொடுப்பான்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். ஏதாவது ஒரு ரூபத்தில் கை நிறைய பணம் வரும். அது எப்படி என்று தெரியாது. உங்கள் பணமோ, அடுத்தவர் பணமோ உங்கள் கைக்கு பணம் வந்தால், பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான். பணம் தரும் சந்தோஷத்தில் ஆனந்தத்தில் இருப்பீர்கள். என்ஜாய் பண்ணுவீங்க. சந்தோஷத்தில் கடமையை மறந்து விட வேண்டாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத இடத்திலிருந்து உதவி வரும். சிக்கலில் சிக்கிக் கொண்டோமே யார் வந்து காப்பாற்றுவார்கள் என்று, யோசித்துக் கொண்டு இருக்கும் போதே கடவுள் உங்களுக்கு கண்முன்னே ஒரு உதவி கரத்தை நீட்டிவிடுவார். மனிதர்கள், நண்பர்களுடைய அருமை பெருமைகளை இன்று நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று அன்பு வெளிப்படும் நாள். பாசம் வெளிப்படும் நாள். குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கப் போறீங்க. இதுநாள் வரை புரிந்து கொள்ளாத நல்லதை இன்று புரிந்து கொள்வீர்கள். கண்ணில் போட்டுக் கொண்டிருந்த சந்தேகம் எனும் கருப்பு கண்ணாடியை கழட்டி வைத்து விடுவீர்கள். இனி மனிதர்கள் எல்லாம் உங்களுக்கு வெள்ளையாக தான் தெரிவார்கள். கவலைப்படாதீங்க நீண்ட நாள் மன குழப்பம் தீரும் இன்று.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சில பல சிரமங்கள் இருக்கும். பிரச்சனைகள் வரும். சண்டை சச்சரவுகள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் நேர்மையாக இருக்கும் பட்சத்தில் எதைக் கண்டும் அஞ்ச வேண்டாம். இறைவன் நிச்சயம் உங்களுக்கு நல்லதை கொடுப்பான். பிரச்சனைகளை சமாளிக்கும் தைரியத்தை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள் போதும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். வேலையை, வியாபாரம் என்று பிசியாக இருந்தாலும் ஏதோ ஒரு மன நிம்மதி உங்களுக்குள் இருக்கும். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், உடல் ஆரோக்கியம் இன்று இந்த நாள் இனிய நாளாகவே அமையும்.
Tags:
Rasi Palan