2025 விசுவாவசு புத்தாண்டு ; வருடப்பிறப்பு சுப நேரம், கைவிஷேட நேரங்கள்..!!!


நாளை விசுவாவசு சித்திரைப் புத்தாண்டு மலரவுள்ளது.

சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்கும் நாள் சித்திரை வருடப்பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, நாளை அதிகாலை 2 மணி 29 நிமிடத்துக்கும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, நாளை அதிகாலை 3 மணி 21 நிமிடத்துக்கும் விசுவாவசு வருடம் பிறக்கிறது.

விஷு புண்ணியகாலம் - 13.04.2025 ஞாயிறு இரவு 10.29 மணி முதல் 14.04.2025 திங்கட்கிழமை காலை 6.29 மணி வரை. ( தலைக்கு - ஆலிலை , காலுக்கு -இலவமிலை )

ஆடை நிறம் : - சிவப்பு , நீலம்

கைவிஷேட நேரங்கள் : - 14.04.2025 திங்கட்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணி வரையும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையும்.

ஆதாய விடயம்

மேஷம் - 2 வரவு 14 செலவு

இடபம் - 11 வரவு 5 செலவு

மிதுனம் - 14 வரவு 2 செலவு

கடகம் - 14 வரவு 8 செலவு

சிம்மம் - 11 வரவு 11 செலவு

கன்னி - 14 வரவு 2 செலவு

துலாம் - 11 வரவு 5 செலவு

விருச்சிகம் - 2 வரவு 14 செலவு

தனுசு - 5 வரவு 5 செலவு

மகரம் - 8 வரவு 14 செலவு

கும்பம் - 8 வரவு 14 செலவு

மீனம் - 5 வரவு 5 செலவு

தோஷ நட்சத்திரங்கள்

திருவாதிரை, சித்திரை, சுவாதி, விசாகம், சதயம், பூரட்டாதி, உத்தரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களை கொண்டோர் தவறாமல் மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்து, தான, தர்மம் செய்து, சங்கிரம தோஷ நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும்.
Previous Post Next Post


Put your ad code here