யாழில். எறும்பு கடிக்கு இலக்கான 22 நாளான குழந்தை உயிரிழப்பு..!!!


யாழ்ப்பாணத்தில் எறும்பு கடிக்கு இலக்கான பிறந்து இருபத்தியொரு நாளேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

ஆலடி உடுவில் மானிப்பாயைச் சேர்ந்த தம்பதியினருக்கு கடந்த 22 ஆம் திகதி பெண் சிசு பிறந்துள்ளது.

குறித்த சிசுவிற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் எறும்பு கடித்த நிலையில் அதனை பெற்றோர் கவனிக்காமல் விட்டதன் காரணமாக நேற்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை பால் குடித்த சிசு மயக்கமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு சிசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

உடற்கூற்று பரிசோதனையில் , எறும்பு கடித்ததன் காரணமாக கிருமி தொற்று ஏற்பட்டு உடற்கூறுகளின் செல்கள் செயலிழந்தமையால் மரணம் சம்பவித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது/

Previous Post Next Post


Put your ad code here

gtag('config', 'G-R9FPB20LQQ');