கொங்கோ படகு விபத்தில் 50 பேர் உயிரிழப்பு..!!!


கொங்கோ குடியரசின் வடமேற்கு பகுதியில் பயணிகள் படகொன்று விபத்திற்குள்ளானதில் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

படகில் தீப்பரவல் ஏற்பட்டதை தொடர்ந்தே படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சுமார் 100 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் காணாமல் போன ஏனைய நபர்களை மீட்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொங்கோ குடியரசின் Bolomba பிராந்தியத்தை நோக்கி 400 பேருடன் பயணித்த படகே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here