கிளிநொச்சியில் அரச உத்தியோகத்தரை தாக்கிய பொலிஸ்; அதிரடி நடவடிக்கை..!!!


கிளிநொச்சியில் அரச உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் விசாரணைக்கு அழைத்துள்ளது.

கடந்த வாரம் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பணியாற்றிய அரச உத்தியோகத்தரான இளைஞன் மீதே தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது.

கிளிநொச்சி சாந்தபுரத்தைச் சேர்ந்த அரச உத்தியோகத்தரான இளைஞன் ஒருவர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காரணமின்றி தன்னை தாக்கி கைவிலங்கிட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் எதிர்வரும் 21 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்திற்கு சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஆகியோரை விசாரணைக்கு வருமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here

gtag('config', 'G-R9FPB20LQQ');