மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 37ஆம் கிராமம் பகுதியில் புத்தாண்டு தினத்தில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (14) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
31 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார். இவர் இன்று அதிகாலை 01.00 மணியளவில் புத்தாண்டினை வரவேற்கும் வகையில் வீட்டு முற்றத்தில் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த போது காட்டு யானை தாக்கி காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் உறவினர்களின் உதவியுடன் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக களுவாஞ்சிகுடி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Tags:
sri lanka news