திருமணம் ஆகாது சேர்ந்து வாழ்ந்த இளம் பெண் கொலை; கொழும்பில் பயங்கரம்..!!!



கொழும்பு - குளியாப்பிட்டி கலஹிடியாவ பகுதியில் பெண் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (08) இரவு நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் புனித மெத்தீவ் மாவத்தை, ஏகலவில் வசித்த 33 வயதான பெண் என தெரியவந்துள்ளது.

குறித்த பெண் சுமார் 4 மாதங்களாக ஒரு வீட்டில் சந்தேக நபருடன் தற்காலிகமாக வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சந்தேகநபர், பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

35 வயதான சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் குளியாப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here