இரு கும்பல்களுக்கிடையிலான மோதலில் சிக்கி பெண் உயிரிழப்பு..!!!


கனடாவில் கல்வி கற்கச் சென்ற இந்திய இளம்பெண் ஒருவர், இரண்டு கும்பல்களுக்கிடையிலான மோதலின்போது, குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் இந்தியரான ஹர்சிம்ரத் (வயது 21) என்னும் இளம் பெண், கனடாவுக்குக் கல்வி கற்கச் சென்றிருந்தார்.

கடந்த வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில், பகுதி நேர பணி - செய்துவந்த ஹர்சிம்ரத், ஹாமில்ட்டன் பகுதியில் பஸ்ஸுக்காக காத்தி ருந்திருக்கிறார்.

அப்போது அங்கு வந்த ஒரு கருப்பு நிற Mercedes காரிலிருந்த ஒருவர், மறுபக்கம் நின்றுகொண்டிருந்த ஒரு வெள்ளை நிற sedan காரிலிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். அப்போது, அவர் சுட்ட ஒரு குண்டு பஸ்ஸுக்காக காத்திருந்த ஹர்சிம்ரத்தின் மார்பில் பாய்ந்துள்ளது. துப்பாக்கியால் சுட்டவர்கள்
தப்பியோடிவிட, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஹர்சிம்ரத், காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் இந்த தாக்குதலை நடத்தியவர்களைத் தேடிவரும் நிலையில், ஒரு நல்ல வாழ்க்கைக்காக கனடா சென்ற தங்கள் மகள் அநியாயமாக பலியான அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்ந்துள்ளது ஹர்சிம்ரத்தின் குடும்பம்.
Previous Post Next Post


Put your ad code here