
இந்திய மக்கள் மீதான பிரான்சிஸின் பாசம் எப்போதும் போற்றப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இன்னிலையில் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனை அடைகிறேன். இந்த துயரமான தருணத்தில், உலகளாவிய கத்தோலிக்க சமூகத்திற்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் அவருடனான எனது சந்திப்புகளை நான் அன்புடன் நினைவுகூருகிறேன் என்றும் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் விரிவான வளர்ச்சிக்கான அவரது அர்ப்பணிப்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். இந்திய மக்கள் மீதான அவரது பாசம் எப்போதும் போற்றப்படும். கடவுளின் அரவணைப்பில் அவரது ஆன்மா நித்திய அமைதியைக் காணட்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.