இன்றைய ராசிபலன் - 01.05.2025..!!!




மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அமோகமான வெற்றி, நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. இன்று சுப காரிய நிகழ்ச்சிகள் துவங்க பிள்ளையார் சுழி போடலாம். நிறைய நல்ல விஷயங்கள் நேர்மறையாகவே நடக்கும். வேலியிலும் வியாபாரத்திலும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் பெருகும். கடன் சுமை குறையும். தேவையற்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாட்களாக ஆசைப்பட்டு, செய்ய முடியாத காரியத்தை இன்று செய்வீர்கள். மனதிருப்தி ஏற்படும். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று அனுபவரீதியாக நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். அடுத்தவர்கள் சொல்லியும் கேட்டிருக்க மாட்டீர்கள். உங்களுக்கே சுய புத்தியும் இருந்திருக்காது. ஆனால் இன்று நீங்கள் எதிர்கொள்ளும் அனுபவம், எது சரி, எது தவறு என்பதை உங்களுடைய வாழ்க்கைக்கு நல்லபடியாக புரிய வைக்கும். இதனால் நீண்ட நாள் இருளில் இருந்த நீங்கள் வெளிச்சத்திற்கு வருவீர்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று ஆதரவாக நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். உறவுகளோடு நேரத்தை செலவு செய்வீர்கள். மனதிற்கு நிம்மதி கிடைக்கும். சுப செலவுகள் ஏற்படும். வேலையில் கொஞ்சம் சிரமங்கள் இருக்கும். இருந்தாலும் எல்லாவற்றையும் சரி கட்டி விடுவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் கவனம் இருக்கட்டும். முதலீட்டிலோ கணக்கு வழக்கிலோ கவனக்குறைவு வேண்டாம்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிரமங்கள் ஏற்படும். சிரமங்களை எல்லாம் தாண்டி உங்களுடைய வேலைகளை, சரியாக செய்து முடிப்பீர்கள். அதற்கான பாராட்டும் கிடைக்கும். கஷ்டப்பட்டு ஒரு வேலையை செய்யும் போது தான் அதற்கு ஒரு மதிப்பும் மரியாதையும் இருக்கும். சுலபமாக எல்லா வேலையும் நடந்து விட்டால் பிறகு என்ன இருக்கிறது.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் நிறைந்த நாளாக இருக்கும். சுறுசுறுப்பான நாளாக இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையும். புதிய முதலீடுகள் செய்யும்போது மட்டும் கவனம் இருக்கட்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உழைப்பு உழைப்பு உழைப்பு என்ற தாரக மந்திரம் தான் ஒலித்துக் கொண்டே இருக்கும். ஒரு நொடி பொழுது கூட உங்களால் ஓய்வு எடுக்க முடியாது. அலைச்சல் அதிகமாக இருக்கும். தேவையற்ற பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். வியாபாரத்தில் முட்டி மோதி லாபம் ஈட்ட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இருந்தாலும் இந்த நாள் இறுதியில் உழைப்பால் ஏற்பட்ட களைப்பும் மன நிம்மதியும், தூக்கத்தை கொடுக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த வருமான தடை நீங்கி, கைக்கு வந்து சேர வேண்டிய பணம் வரும். முதலீடுகளை அதிகப்படுத்தலாம். குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையிடம் பொய் சொல்லக்கூடாது.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்தி வந்து சேரும். தொலைபேசியின் மூலமாகவோ, நண்பர்கள் மூலமாகவோ, உறவினர்களின் மூலமாகவோ, இறைவன் உங்களுக்கு இன்று சந்தோஷத்தை கொடுக்க போகின்றான். நீண்ட நாள் எதிர்பார்த்த நல்லது நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வண்டி வாகனம் ஓட்டும் போது கவனமாக இருங்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். பிரச்சனைகள் நீங்க கூடிய நாள். வேலையில் ஆர்வம் காட்டக்கூடிய நாள். வியாபாரத்தை முன்னேற்ற புதிய முயற்சிகளை இன்றைய தினம் மேற்கொள்ளலாம். புது மனிதர்களின் சந்திப்பு உங்களுக்கு நல்ல ஆதாயத்தை கொடுக்கும். கட்டுமான தொழில் லாபத்தை கொடுக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களுடைய திறமைகள் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரத்தில் உங்களிடம் பணிபுரிபவர்களுடைய எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். அடுத்தவர்களுடைய வாழ்த்துக்களை இன்று பெறக்கூடிய நாளாகவும் இருக்கும். புண்ணியம் சேரும் நாள் இன்று.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன குழப்பங்கள் இருக்கும். புது முடிவுகளை எடுக்க வேண்டாம். யார் யாரோ சொல்லுவதை வைத்து, அடுத்தவர்களை தவறாக எடை போட வேணாம். உண்மை என்ன என்பதை நீங்களே அலசி ஆராய்ந்து கொள்ளுங்கள். உறவுகளிடம் பேசும்போது கவனமாக இருக்கவும். இறை வழிபாடு செய்யுங்கள். மன அமைதி கிடைக்கும் குழப்பம் நீங்கும்.
Previous Post Next Post


Put your ad code here