மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகம் நிறைந்த வாரமாக இருக்கும். எவ்வளவு வேலை சுமை இருந்தாலும் சரி, அதையெல்லாம் சிரித்த முகத்தோடு ஏற்றுக்கொண்டு உங்களுடைய கடமைகளை முடிப்பீர்கள். வியாபாரத்திலும் அப்படித்தான். ஓடி ஓடி சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். இருந்தாலும் அதையெல்லாம் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு நிதி நிலைமையை சீர்படுத்திக் கொள்வீர்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கோட்டை விட்டுவிடுவீர்கள். மனைவி பிள்ளைகளின் மீது அக்கறை காட்ட மறந்துடாதீங்க. தினம் தினம் குடும்பத்தோடு ஒரு மணி நேரம் செலவு செய்யுங்கள். முடிந்தால் குடும்பத்துடன் ஒரு வேலை அமர்ந்து சாப்பிடுங்கள். சந்தோஷம் இரட்டிப்பாகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் கடந்து வந்த கசப்பான சம்பவங்களை எல்லாம் மறக்க இந்த வாரம் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வேலையில் அக்கறையும் ஆர்வத்தையும் அதிகமாக காட்டுவீர்கள். போனது போகட்டும் இனி வரக்கூடிய வாழ்க்கையை சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நீங்கள் எடுத்த முடிவு சரி, எதிர்பார்த்ததை விட நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வர போகிறது. பயன்படுத்திக் கொள்ளுங்கள். பழைய கதையை பேசி நேரத்தை வீணாக்காதீர்கள். எதிரிகளாக இருந்தாலும், மன்னிக்கும் குணம் உங்களிடம் தேவைப்படுகிறது. வாழ்க்கையை ஒரு அட்ஜஸ்ட்மெண்டில் ஓட்டினால் உங்களுக்கு பிரச்சனை இல்லை. தினமும் விநாயகரை கும்பிடும் போது எதிர் கொள்ளும் தடைகளில் கடினம் இருக்காது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கஷ்ட காலத்தில் சரியான உதவி கிடைக்கும். உறவினர்கள் நண்பர்கள் என்று உங்களை கை தூக்கிவிட வருவார்கள். உறவுகள், சக மனிதர்களைப் பற்றிய முக்கியத்துவத்தை நீங்கள் நன்றாக புரிந்து கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து விலகும். மனக்குழப்பு இருக்கும். இருந்தாலும், இறைவன் உங்கள் பக்கத்தில் இருக்கிறார் என்பதை மறந்து விடாதீங்க. செலவை குறைக்க வேண்டும். சேமிப்பை உயர்த்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எதிர் காலத்திற்கு அது தான் உங்களுக்கு நன்மையை தரும். தினமும் சிவன் வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சியான வாரமாக இருக்கும். வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். செலவு செய்ய செய்ய வருமானம் வந்து கொண்டே இருக்கும். நீங்க கவலையே படாதீங்க. கடன் சுமை குறையும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் பெண்கள் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும். நேரத்திற்கு ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு, நேரத்திற்கு ஓய்வு எடுப்பது நல்ல பலன்களை கொடுக்கும். இது வெயில் காலம் என்பதால் உங்கள் கையால், வாயில்லா ஜீவன்களுக்கு தண்ணீர் தானம் செய்யுங்கள். வயதான முதியவர்களுக்கு பழரசம் வாங்கி கொடுங்கள். தீராத துன்பங்கள் எல்லாம் உடனடியாக தீரும். வீண் செலவு குறையும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இந்த வாரம் மனதை தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்தவர்களை குறை சொல்லக்கூடாது. உறவுகளுக்குள் ஒருவரை பற்றி ஒருவர் புறம் பேசவே கூடாது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருங்கள். உங்களால் முடிந்தால் உதவி செய்யுங்கள். உபத்திரமாக நடந்து கொள்ள வேண்டாம். மற்றபடி வேலை வியாபாரம் எல்லாம் நல்லபடியாக செல்லும். செலவுகள் குறையும். சேமிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். வேலையில் மன நிம்மதி கிடைக்கும். செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமை ஏதாவது ஒரு அம்மன் கோவிலுக்கு சென்று வருவது நன்மையை தரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பிரச்சனைகள் வரிசை கட்டி நிற்கும். ஆனால் உங்களுடைய திறமை வெளிப்படும் வாரமாக இருக்கப் போகிறது. பிரச்சனைகளில் சந்து பொந்துகளை கண்டுபிடித்து சுலபமாக வெளி வருவீர்கள். உங்களுக்கான பிரச்சனைகள் மட்டுமல்ல, உங்களுடன் இருப்பவர்களையும் பிரச்சனையில் இருந்து வெளிக்கொண்டு வருவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். மன நிம்மதியை அடைவீர்கள். நீண்ட நாள் பண பிரச்சனை சரியாகும். குடும்ப சண்டைகள் தீரும். பிள்ளைகள், மனைவி குடும்பம் என்று நேரத்தை செலவழிக்க வாய்ப்புகளும் கிடைக்கும். வாரத்தில் ஒரு நாளோ இரண்டு நாளோ, இரண்டு பேருக்கு உங்கள் கையால் தயிர் சாதம் அன்னதானம் செய்து பாருங்கள். பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசி காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். தேவையில்லாத பிரச்சினைகள் தானாக உங்களிடமிருந்து விலகும். இறையருள் பரிபூரணமாக கிடைக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் அதிகமாக ஈடுபடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனம் இருக்க வேண்டும். முழுசாக அடுத்தவர்களை நம்பி எந்த முயற்சியும் மேற்கொள்ள வேண்டாம். குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். வண்டி வாகனம் ஓட்டும் போதும் கவனமாக இருக்க வேண்டும். சொத்து சுகம் வாங்கும் யோகமும் சில பேருக்கு இருக்கிறது. பைரவர் வழிபாடு உங்கள் பிரச்சனைக்கு ஒரு வழியை காட்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த வாரம் நல்ல முன்னேற்றம் நிறைந்த வாரமாக இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லாம் வெற்றியை கொடுக்கும். வேலை வியாபாரத்தில் எல்லாம் விசுவாசத்துடன் நேர்மையோடு நடந்து கொள்வீர்கள். உங்களுடைய விசுவாசத்திற்கும் நேர்மைக்கும் தக்க மதிப்பு கிடைக்கப் போகிறது. வாழ்க்கையில் நீங்களும் விரல் விட்டு எண்ணக்கூடிய செல்வந்தர்களின் பட்டியலில் வருவதற்கு கூட வாய்ப்புகள் இருக்கிறது. எதிர்பாராத அதிர்ஷ்டம் உங்களை வந்து சேரும். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். முருகனைக் கும்பிட்டால் மேலும் வாழ்க்கையில் முன்னேற புதிய கதவுகள் திறக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்க காத்துக்கொண்டிருக்கிறது. புதிய வாய்ப்புகள் உங்கள் வீட்டு வாசல் கதவை தட்டும். நல்லதே நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பாராத அளவு முன்னேற்றம் கிடைக்கும். பிள்ளைகளுடைய எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்புகளை மேற்கொள்ள முயற்சிகளை துவங்கலாம். இந்த வாரம் நீங்கள் உறவுகளோடு நண்பர்களோடு கவனமாக பேச வேண்டும். உங்களுக்கு நடந்த நல்ல விஷயத்தை வெள்ளந்தையாக எல்லோரிடத்திலும் சொல்லாதீங்க. கண் திருஷ்டி விழ வாய்ப்புகள் இருக்கிறது. தினமும் துர்க்கை அம்மனை நினைத்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால் நன்மை நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொருத்தவரை இந்த வாரம் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதிக முதலீடு செய்வதாக இருந்தால் ஒன்றுக்கு பலமுறை சிந்திக்கவும். வீட்டில் இருப்பவர்களுடைய பெரியவர்களின் பேச்சு, அனுபவ சாலைகளின் பேச்சை மீறி நீங்களாக ஒரு முடிவை எடுக்கக் கூடாது. அடம் பிடிக்கக் கூடாது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். இளம் வயதில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் அதிகமான பொறுமையும் நிதானமும் தேவைப்படுகிறது. வேலை வியாபாரத்தில் கூட பொறுமையாக இருக்க வேண்டும். அகல கால் வச்சிடாதீங்க. மூன்றாவது புது நபரை எல்லாம் நம்பிராதிங்க. தினமும் குலதெய்வத்தை கும்பிடுங்கள் நன்மை நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். வீட்டிற்கு தேவையான வேலைகளை செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இருந்தாலும் கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன வாக்குவாதம் வந்து விலகும். மூன்றாவது நபர் முன்பாக குடும்ப சண்டைகளை போட வேண்டாம். எதுவாக இருந்தாலும் ஒளிவு மறைவு இல்லாமல் பேச வேண்டாம். செலவை குறைத்துக் கொள்ளுங்கள். கடன் வாங்குவதையும் குறைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். பெரியவர்களுக்கு மதிப்பு கொடுத்து நடக்க வேண்டும். எல்லோரையும் உதாசீனப்படுத்த வேண்டாம். மனதை அமைதியாக வைக்க ஏதாவது ஒரு சித்தர் வழிபாடு, மகான்கள் வழிபாடு உங்களுக்கு கை கொடுக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இந்த வாரம் அயராது உழைக்க வேண்டும். அப்போதுதான் நல்ல பெயர் கிடைக்கும். வாழ்க்கையை போன போக்கில் விட்டு விடாதீர்கள். இழுத்துப் பிடித்து ஒரு டைம் டேபிள் போட்டு இந்த வேலைகளை, இந்த நேரத்தில் முடித்தே ஆக வேண்டும் என்று ஒரு உறுதி மொழியை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். டைம் டேபிள் போட்டால் மட்டும் போதாது. அதை பின்பற்ற வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே இந்த வாரத்தின் பிரஷர் குறையும். இல்லை என்றால் வேலை, வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எல்லாம் சிக்கிக் கொள்வீர்கள். வார இறுதியில் முட்டி மோதிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். ஞாயிற்றுக்கிழமை நாளை சந்தோஷமாக கொண்டாட முடியாது. பாத்துக்கோங்க, செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கை துணையோடு அனுசரணை தேவை. தினமும் ஹனுமன் வழிபாடு செய்பவர்களுக்கு பிரச்சினைகள் சிறியதாக தெரியும்.
Tags:
Rasi Palan