மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று ஆழ்ந்த யோசனையில் இருப்பீர்கள். வேலை ஒரு பக்கம் இருக்க, உங்களுடைய சிந்தனை வேறு ஒரு பக்கம் செல்லும். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனம் இருக்கட்டும். ஏதாவது தவறு நடந்துவிட்டால் பதில் சொல்லும் இடத்தில் நீங்கள் தான் நிற்பீர்கள். ஜாக்கிரதை, மனதை ஒருநிலைப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இன்று அதுதான் நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் தீரும். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆன்மீக வழிபாட்டில் மனதை ஈடுபடுத்துவீர்கள். மனக்குழப்பம் நீங்கி, குழப்பமான பிரச்சனைகளுக்கு தீர்க்கமான முடிவையும் இன்று எடுப்பீர்கள். வீட்டில் சுபகாரிய தடை விலகும். சுப செலவு ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். தேவையற்ற பிரச்சனைகள் உங்களை விட்டு விலகும். மேலதிகாரிகளுடைய ஆதரவால் வேலையில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். புது விஷயங்களை நல்லபடியாக கற்றுக் கொள்வீர்கள். பிரமோஷன் சம்பள உயர்வுக்கான பிள்ளையார் சுழியை இன்று போடலாம். வியாபாரத்திலும் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகமாக இருக்கும். எல்லா வேலைகளையும் சரியான நேரத்திற்கு முடித்து விடுவீர்கள். உங்களிடம் ஒரு பொறுப்பை கொடுத்தால், அதிலிருந்து நீங்கள் பின்வாங்கவே மாட்டீர்கள். நல்ல பெயர் வாங்குவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு உங்களுக்குத்தான். கவலையே படாதீங்க. இன்று சந்தோஷத்திற்கு எந்த குறையும் வராது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டு புகழ் கிடைக்கும். நிதி நிலைமை உயரும். கடன் சுமை குறையும். உறவுகளுக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி, ஒற்றுமை நிலவும். சுப செலவுகள் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கிறது. பிள்ளைகளுடைய ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மன நிம்மதி அடைவீர்கள். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய நாளாக இருக்கும். சவால் விட்ட இடத்தில் ஜெயித்து காட்டுவீர்கள். எதிரிகள் முன்பு தலை நிமிர்ந்து நடப்பீர்கள். பெருமையான நாளாக இந்த நாள் இருக்கும். நிதி நிலைமையில் உயர்ந்த இடத்திற்கு செல்வீர்கள். செல்வாக்கில் உங்களுக்கு முதலிடம் கிடைக்கும். சென்ற இடமெல்லாம் வரவேற்பு தான் என்ஜாய் பண்ணுங்க.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பொறுப்பு அதிகமாக தேவைப்படுகிறது. பொறுப்பு இல்லாமல் நீங்கள் நடந்து கொண்டால், நல்ல நல்ல வாய்ப்புகள் உங்கள் கைகழுவி செல்ல கூடும். வேலை பளு அதிகமாக இருக்கும். நேரத்தை வீணாக செலவழிக்க வேண்டாம். அதிக நேரம் கைப்பேசி பார்க்க வேண்டாம்.
விருச்சிகம்
விருச்சக ராசி காரர்களுக்கு இன்று அன்பு வெளிப்படும் நாள். கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும். மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை அமைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. காதலை வீட்டில் செல்லுங்கள். நிச்சயம் பெற்றவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். இளைஞர்களுக்கு இன்று அற்புதமான நல்ல பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். அம்மனை கும்பிட்டு விட்டு நல்ல காரியங்களை துவங்குங்கள். இன்று நீங்கள் துவங்கும் நல்ல காரியம் எதிர்காலத்தில் உங்களுக்கு நல்ல லாபத்தை கொடுக்கும். பெற்றவர்களின் ஆசி கிடைக்கும். மனதில் சந்தோஷம் இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சோம்பேறித்தனத்தோடு இருப்பீர்கள். வேலையில் கவனம் செலுத்த மாட்டீர்கள். உருப்படியாக வேலை செய்ய வேண்டும் என்று மனது சொன்னாலும். மூளை உங்கள் பேச்சைக் கேட்காது. கொஞ்ச நேரம் தூக்கம், கொஞ்ச நேரம் சாப்பாடு என்று இந்த நாள் வீணாக வாய்ப்பு உள்ளது. உஷாரா இருந்துக்கோங்க.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் முக்கியமான வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமான விஷயத்தை மறந்து விட்டு திட்டு வாங்க வாய்ப்புகள் இருக்கிறது. எந்தெந்த நேரத்திற்கு எந்தெந்த வேலையை செய்ய வேண்டும், எந்தெந்த பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு பேப்பர் பேனாவை வைத்து எழுதிக் கொள்ளுங்கள். இன்று அது தான் உத்தமம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். குடும்பத்தோடு கோவிலுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. குலதெய்வத்தின் ஆசி உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த தடைகள் விலகும். மன குழப்பம் நீங்கும். சந்தோஷம் அதிகரிக்கும்.
Tags:
Rasi Palan