இன்றைய ராசிபலன் - 16.05.2025..!!!


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியமான நாளாக இருக்கும். நலமான நாளாக இருக்கும். வேலை வியாபாரங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும். சொன்ன நேரத்தில், சொன்ன வேலையை முடித்துக் கொடுத்து நல்ல பெயர் வாங்குவீர்கள். கொடுத்த வாக்கில் இருந்து தவற மாட்டீர்கள்.

ரிஷபம்


ரிஷப ராசி காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் இருக்கும். இது போக பெண்கள் மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். மன நிம்மதி கிடைக்கும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையான நல்ல விஷயங்கள் எல்லாம் வீடு தேடி வரும். நண்பர்களும் உறவுகளும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வாழ்க்கையில் முன்னேற, வழிகாட்ட கடவுள் துணை ஆக நிற்பான். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானம் பெருகும் கடன் சுமை குறையும்.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று சுகபோக வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். எல்லா வேலைகளும் சரியான நேரத்தில் நடக்கும். சோம்பேறித்தனம் இருக்காது. மன நிறைவோடு இந்த நாளை நகர்த்தி செல்வீர்கள். நிதி நிலைமையும் சீர்படும். நீண்ட தூர பயணத்தை கொஞ்சம் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கைநிறைய வருமானம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. நீண்ட நாள் தடைப்பட்டு இருந்த சுபகாரியங்கள் நடக்கும். கோர்ட்டு கேஸ் வழக்குகள் உங்கள் பக்கம் சாதகமாக தீர்ப்பாகும். சொத்து சுகம் வாங்க, வீட்டில் மனைவிக்கு நகை பரிசாக அளிக்கக்கூட வாய்ப்புகள் இருக்கிறது. இன்று உங்களுக்கு அமோகமான அதிர்ஷ்டம் தரக்கூடிய நாள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று நல்ல வேலைகளை செய்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி புரிவீர்கள். பொது பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். இதனால் மனநிறைவு உண்டாகும். பாவங்கள் எல்லாம் உங்களை விட்டு விலகியதையும் உணர்வீர்கள். ஆன்மீக வழிபாடு இன்று உங்களுக்கு பெரிய அளவில் மனதிற்கு நிம்மதி கொடுக்கப் போகிறது.

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். எப்படியாவது இந்த வேலையை முடித்து விட வேண்டும் என்று ஒரு குறிக்கோளோடு செயல்படுவீர்கள். உழைப்புக்கேற்ற ஊதியமும் கிடைக்கும். சமுதாயத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். நீண்ட நாள் கனவு நினைவாகும்.

விருச்சிகம்


இன்று விருச்சிக ராசி காரர்களுடைய திறமை வெளிப்படும். பாராட்டு கிடைக்கும். வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சுப செலவுகள் வீட்டில் உண்டாகும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். இந்த நாள் இனிய நாளாக இருக்கப் போகிறது. மன நிறைவோடு இன்று இரவும் நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிரமங்கள் இருக்கக்கூடும். அதற்காக பயப்பட வேண்டாம். நேரத்திற்கு சாப்பிட்டு, நேரத்திற்கு அந்தந்த வேலைகளை முடித்து விட்டாலே போதும். பிரச்சனைகள் பெருசாக வராது. கைபேசி பார்க்கும் நேரத்தை குறைத்துக் கொள்ளுங்கள். நேரத்தை அனாவசியமாக வீணாக்க வேண்டாம்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு தேவையற்ற மனபயமும் பதட்டமும் இருக்கும். புதிய முடிவுகள் எடுப்பதாக இருந்தால் நாளை தள்ளிப் போடுங்கள். புதிய முயற்சிகளையும் நாளை தள்ளிப் போடுங்கள். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அனுபவசாலிகளை பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். பெரியவர்களுடைய பேச்சை தட்டிக் கழிக்க வேண்டாம்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் சோர்வு அசதி இருக்கும். நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். வேலைப்பளுவை தூக்கி தலை மேல் போட்டுக் கொள்ள வேண்டாம். முடியாது என்ற வேலையை முடியாது என்று சொல்லுவது தான் நல்லது. பேச்சில் தெளிவு இருந்தால் இந்த நாள் நல்லதை கொடுக்கும். பேச்சில் குழப்பம் இருக்கும் பட்சத்தில் பின் விளைவுகள் ஏற்படும் ஜாக்கிரதை.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதியான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுடைய பொறுப்புகளை சரியாக செய்து முடிப்பீர்கள். நிதிநிலைமை சீராகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். அதிகம் வாய் பேசாதீங்க. பொய் சொல்லாதீங்க. குறிப்பாக வாழ்க்கைத் துணையிடம் ஜாக்கிரதையாக பேசவும்.
Previous Post Next Post


Put your ad code here