இன்றைய ராசிபலன் - 17.05.2025..!!!


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல சுறுசுறுப்பு இருக்கும். வியாபாரத்தில் ஈடுபாடும் நடந்து கொள்வீர்கள். வாழ்க்கையில் முன்னேற நிறைய வழிகள் கிடைக்கும். சந்தர்ப்பங்களை கை நழுவ விடாதீர்கள். குல தெய்வத்தை கும்பிடுங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மனது அமைதியாக இருக்கும். தேவையற்ற சிந்தனைகள் நீங்கும். வேலையில் ஆர்வம் அதிகரிக்கும். உங்களை நீங்கள் அழகுபடுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பர்ஸ்னாலிட்டி உயரும்போது வாழ்க்கைத் தரமும் உயரும். இதை நீங்கள் தினமும் ஃபாலோ பண்ணலாம்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். செலவுகளை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். ஆடம்பர செலவினால் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நீண்ட தூர பயணங்கள் நன்மையை தரும்.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனசோர்வு இருக்கும். எடுத்த வேலையில் சின்ன பின்னடைவு ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. கவலைப்படாதீங்க, உங்கள் மனதை உறுதியோடு வைத்துக் கொண்டால், எவ்வளவு கடினமான சூழ்நிலையில் இருந்தும் உங்களால் வெளிவர முடியும். இறைவனின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்கள் இன்று நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் என நிம்மதியை கொடுக்கும். வேலையில் முன்னேற்றம் இருக்கும். முதலீடுகளில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். மூன்றாவது நபரை முழுமையாக நம்பாதீங்க.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பார்த்த வேலைகள் சரியாக நடக்காது. சின்ன சின்ன ஏமாற்றங்கள் மனசோர்வை கொடுக்கும். ஆனால் சோர்வையும் தாண்டி உங்களால் ஜெயிக்க முடியும் என்று சிந்திக்க வேண்டும். தோல்வியை, வெற்றிக்கு முதல் படி என்று சொல்லுவார்கள். அதை நீங்கள் இன்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மறதிகள் சின்ன சின்ன பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்க்கும். வேலையில் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக்கொள்வது ரொம்ப ரொம்ப நல்லது. ஒரு வேலையை துவங்கும் போது தாமதம் வேண்டாம். குறித்த நேரத்திற்கு முன்பே உங்களுடைய கடமைகளை முடித்துக் கொள்ளுங்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்கள் இன்று துணிச்சலோடு செயல்படுவீர்கள். எதற்கும் பயப்பட மாட்டீர்கள். உங்களுடைய பேச்சாற்றலின் மூலம் நிறைய உண்மைகள் வெளிவரும். மேலதிகாரிகள் முன்பு உங்களுடைய திறமை வெளிப்படும். நீண்ட நாள் மறைத்து வைத்திருந்த உண்மைகளை வெளிக் கொண்டு வந்து சாதனை படைக்க கூட வாய்ப்புகள் இருக்கிறது.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று புதிய முதலீடுகளை செய்யலாம். வியாபாரத்தை விரித்து விரிவுபடுத்த முயற்சி செய்யலாம். உங்களுக்கான வெற்றியை கடவுள் இன்று சுலபமாக கொடுக்கப் போகின்றான். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பணம் நகை சேர்க்கைக்கு வாய்ப்புகள் இருக்கிறது. சுப செலவுகள் உண்டு.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. காலை முதலே ஓடத் துவங்கி விடுங்கள். இல்லை என்றால் இன்று இரவு எல்லா வேலையும் மொத்தமாக உங்கள் தலைமையில் வந்து விழும். பொறுப்புகளை அடுத்தவர்கள் கையில் ஒப்படைக்க கூடாது. உடைமைகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வரவும் வாய்ப்புகள் உள்ளது. உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். பொதுப் பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். மன நிம்மதி அடைவீர்கள். தேவையற்ற டென்ஷன் குறையும். இரவு நிம்மதியான தூக்கம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். வேலையிலும் வியாபாரத்திலும் அலட்சியம் வேண்டாம். விளையாட்டுப் போக்காக எதையும் செய்யாதீர்கள். விளையாட்டு போக்காக எதையும் பேசாதீர்கள், நாலு பேர் மத்தியில் பேசும்போது கவனத்தோடு செயல்படவும். குறிப்பாக உங்களுக்கு மீட்டிங் ஏதாவது இருந்தா ரொம்ப ஜாக்கிரதையா பேசுங்க.
Previous Post Next Post


Put your ad code here