மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிதிநிலைமை சீர்படும். தேவைக்கு ஏற்ப பணம் கைக்கு வரும். தேவைகளை சரியாக பூர்த்தி செய்து கொள்வீர்கள். பண பிரச்சனையிலிருந்து வெளி வருவீர்கள். நிம்மதியான தூக்கமும் நிம்மதியான சாப்பாடு இன்று உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். விடுமுறை நாளுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. குடும்பத்தோடு சந்தோஷமாக நேரத்தை கழிக்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல ஓய்வு கிடைக்கும். சந்தோஷமாக குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். உற்சாகத்தோடு இருப்பீர்கள். வேலை வியாபாரத்தில் இருந்து பெருசாக எந்த தொந்தரவும் இருக்காது. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இரவு நல்ல தூக்கமும் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். தலை குனிந்த இடத்தில் தலை நிமிர்ந்து நிற்பீர்கள். உங்களுடைய சுய கௌரவத்தை காப்பாற்ற போராடுவீர்கள். நல்லதே நடக்கும். எதிரிகளுடைய வாயை அடைப்பதற்கு சரியான பதிலையும் கொடுப்பீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடக்க பேச்சு வார்த்தை நடக்கும். சுப செலவுகளும் உண்டு. வேலையில் முழு கவனத்தோடு இருக்கவும். உடன் வேலை செய்பவர்களை முழுமையாக நம்பி மனதில் இருக்கும் விஷயங்களை வெளிப்படையாக பேசாதீங்க. ஜாக்கிரதையா இருங்க.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். கடன் கொடுக்க வேண்டாம் கடன் வாங்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். இறை வழிபாட்டில் ஆர்வம் காட்டுங்கள். மன நிம்மதி கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வேலைப்பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். வீட்டுப் பெண்களுக்கு கொஞ்சம் அலைச்சல் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள்.
துலாம்
துலாம் ராசி காரர்கள் இன்று விடுமுறை நாள் என்று கூட பார்க்க மாட்டீர்கள். அயராது உழைத்து, உங்கள் கடமைகளை முடித்து விடுவீர்கள். நல்ல பெயரும் எடுப்பீர்கள். சிந்தனையில் எந்த குழப்பமும் இருக்காது. குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். நிதி நிலைமை ஏற்படும். நிம்மதியான தூக்கம் மனதிற்கு சந்தோஷத்தையும் கொடுக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்கள் இன்று உற்சாகத்தோடு இருப்பீர்கள். வீட்டில் சுத்தம் செய்யக்கூடிய வேலையில் ஆர்வம் காட்டுவீர்கள். பழுதான வண்டி வாகனத்தை சரி செய்வீர்கள். இந்த ஞாயிற்றுக்கிழமை நீங்கள் செய்யக்கூடிய வேலை, வரும் வாரம் முழுவதும் உங்களுக்கு உதவியாக இருக்கும். ஆகவே இந்த ஞாயிற்றுக்கிழமை உங்களுக்கு பெரிய அளவில் ஓய்வு கிடைக்காது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். மேலதிகாரிகளுடைய ஆதரவை பெறுவீர்கள். வியாபாரத்தை பொருத்தவரை நல்ல லாபம் நிறைந்த நாளாக தான் இருக்கும். பார்ட்னரோடு இருந்து வந்த சலசலப்பு கூட சரியாகிவிடும். வாரா கடன் எல்லாம் வசூல் ஆகும். நிதிநிலைமை சீர்படும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பேராசை வரும். அடுத்தவர்களுடைய வாழ்க்கையை பார்த்து சில பேர் பொறாமை படலாம். அந்த பொறாமை குணம் உங்களுடைய வாழ்க்கையில் சிக்கலை கொண்டு வரலாம். ஜாக்கிரதை, அடுத்தவர்களை பார்த்து எதற்கும் ஆசை படாதீங்க.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகள் கிடைக்கும் நாள். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். வேலையில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த இடையூறுகள் சரியாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை கொடுக்கும். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று விடுமுறை நாளாகவே இருந்தாலும் வேலையில் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். ஓய்வு எடுப்பதற்கு நேரம் இருக்காது. ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவை மட்டுமே சாப்பிடுவது எதிர்காலத்திற்கு நல்லது. வருமானத்தை சேமிக்க பழகுங்கள் எதிர்காலத்திற்கு நன்மை தரும்.
Tags:
Rasi Palan