இந்த வார ராசிபலன் 19.05.2025 முதல் 25.05.2025 வரை..!!!


மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். குடும்பத்திற்கு புதுவரவு இருக்கும். திருமணம் நடக்கலாம், குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கலாம், ஏதோ ஒரு வகையில் புது சொந்தங்கள் உங்கள் குடும்பத்தில் இணையும். சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை பெரிய அளவில் லாபமும் இருக்காது. பெரிய அளவில் நஷ்டமும் இருக்காது. எப்போதும் போல வியாபாரம் சீராக செல்லும். சந்தோஷத்திற்கும் வேலை பிசிக்கும் இடையில் ஆரோக்கியத்தை மறந்து விடாதீங்க. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தினமும் துர்க்கை அம்மனை கும்பிடுங்கள் மன தைரியம் அதிகரிக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். நிதிநிலைமை உயர்வும். கடன் சுமை குறையும். நீண்ட நாட்களாக சிக்கி இருந்த பண கஷ்டத்திலிருந்து விடுபடுவீர்கள். மனநிம்மதியை பெறுவீர்கள். இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கும். வேலையில் கூடுதல் கவனத்தோடு நடந்து கொள்ள வேண்டும். உங்களுடைய பொறுப்புகளை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தை பொருத்தவரை நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்ததை விட நல்ல லாபத்தை அடைவீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட தூர பயணங்களை மட்டும் கொஞ்சம் தவிர்த்துக் கொள்ளுங்கள். அனாவசிய செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். தினமும் விநாயகர் வழிபாடு நன்மையை செய்யும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை தேவை. குறிப்பாக வீட்டில் சொந்த பந்தங்களோடு எந்த சண்டையும் போடக்கூடாது. சண்டை வந்தாலும் நீங்கள் வாக்குவாதம் செய்யக்கூடாது. விட்டுக் கொடுத்த நடக்க வேண்டும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்லுங்கள். மற்றபடி வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த பிரமோஷன் உங்கள் கையை வந்து சேரும். வியாபாரத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மூன்றாவது நபரை முழுசாக நம்ப வேண்டாம். கடனுக்கு வியாபாரம் செய்ய வேண்டாம். தினமும் அஷ்டலட்சுமி வழிபாடு செய்யுங்கள். நன்மை நடக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. கூடுமானவரை செலவுகளை குறைப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் சில பேருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையை உண்டு பண்ணலாம். ஜாக்கிரதை, வேலையில் கவனத்தோடு நடந்து கொள்ளுங்கள். மூன்றாவது நபரை பற்றி எதுவும் பேசாதீங்க. முன்பின் தெரியாதவர்களுடைய வாழ்க்கையைப் பற்றி நீங்கள் விமர்சிக்க வேண்டாம். புறம் பேசும் பழக்கத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் பேசுவதில் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்திலும் நிதானம் தேவை. தினமும் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள. ஓம் நமசிவாய மந்திரத்தை 10 நிமிடம் சொல்லுங்கள். நல்லது நடக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். புது வேலை தேடுவது, புதுசாக வியாபாரம் துவங்குவது, வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி போடுவது, இதுபோல விஷயங்கள் எல்லாம் இந்த வாரம் உங்களுக்கு லாபகரமாக இருக்கும். வேலையில் முழு கவனம் செலுத்த வேண்டும். மேல் அதிகாரிகளோடு பணிவோடு நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய பொறுப்புகளை நீங்களே முன் நின்று செய்து முடிக்கவும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை விரிவு படுத்த வங்கி கடன் முயற்சிக்கலாம். நீண்ட தூர பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த சின்ன சின்ன பிரச்சனைகள் சரியாகிவிடும். தினமும் முருகர் வழிபாடு உங்கள் வாழ்க்கையை பிரகாசமாக மாற்றும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இந்த வாரம் அயராது உழைப்பீர்கள். உங்களுடைய குடும்ப சூழ்நிலையை மாற்ற நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் உங்களுக்கு முழு வெற்றியை கொடுக்கும். அதற்கு கடவுளை துணையாக இருப்பார். வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். சேமிப்பை அதிகரிப்பீர்கள். வியாபாரத்தில் கடின உழைப்பை முதலிராக போடுவீர்கள். எதிர்பார்த்த லாபத்தையும் எடுப்பீர்கள். உங்களுக்கான நல்லதை மட்டும் நீங்கள் பார்க்க மாட்டீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்களுடைய வாழ்க்கையின் நலனிலும் அக்கறை காட்டுவீர்கள். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள். குலதெய்வ வழிபாடு உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற இன்னும் பெரிய வழியை காட்டிக் கொடுக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிறைய ஆச்சரியமான நல்ல விஷயங்கள் காத்துக் கொண்டிருக்கிறது. இதுநாள் வரை பிரச்சனையில் சிக்கி இருந்த உங்களுக்கு விடுதலை கிடைக்கப் போகிறது. நிதி நிலைமை சீராகும். கடன் சுமை குறையும். பல நாள் பிரச்சனை இருந்து உங்களை விடுபட வைக்க கடவுள் ஆசிர்வாதத்தை வழங்கப் போகின்றான். கவலைப்படாதீங்க சோம்பேறித்தனம் இல்லாமல் உங்களுடைய முயற்சிகளில் மட்டும் முழு கவனம் செலுத்தினால் போதும். இந்த வாரம் எல்லாமே நல்லபடியாக முடியும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். துணிச்சலை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். பிரச்சனையை கண்டு பயந்து ஒதுங்காதீர்கள். பிரச்சனையை நேருக்கு நேர் பார்த்தாலே போதும் உங்களுக்கு நல்லது நடக்கும். இந்த வாரம் வாராஹி அம்மனை கும்பிட்டு பாருங்கள். வாழ்க்கையில் புதிய மாற்றத்தை சந்திப்பீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த வாரம் புது தைரியம் பிரிக்கும். தன்னம்பிக்கை பிறக்கும். எவ்வளவு பிரச்சனை வந்தாலும் முட்டி மோதி பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்து விடுவீர்கள். வேலையில் உங்களுடைய பிரச்சினைகளை வெளிப்படையாக பேசுவீர்கள். மேலதிகாரிகளுடைய நம்பிக்கையும் பெறுவீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகளை சரி செய்வீர்கள். லாபத்தை உயர்த்த நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நிச்சயம் வெற்றியை கொடுக்கும். அதிக வட்டிக்கு மட்டும் கடன் வாங்க வேண்டாம். வங்கிக் கடன் முயற்சி செய்யலாம். கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தும் போது இந்த வாரம் கவனமாக இருக்கவும். தினமும் நரசிம்மர் வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் நேர்மை நியாயம், கடமை கட்டுப்பாடு என்று இருப்பீர்கள். நீங்களும் குறுக்கு வழிக்கு போக மாட்டீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்களையும் நேர்வழியில் நடத்திச் செல்வீர்கள். இதனாலையே சில பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். பொறுமையை கையாளுங்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களது வேலையை மட்டும் பார்க்கவும். அடுத்தவர்களுடைய பிரச்சனையில் மூக்கை நுழைக்க வேண்டாம். வியாபாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த நல்லது, எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். சுப செலவுகள் ஏற்படும் விநாயகரை கும்பிடுங்கள் நன்மை உண்டு.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மதிப்பும் மரியாதையும் உயரக்கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய பிரச்சனைகளை நீங்கள் எதிர் கொள்ளும் விதம் மிகவும் அழகாக இருக்கும். அடுத்தவர்களுடைய பிரச்சனைகளையும் மிக மிக சுலபமாக தீர்த்து வைப்பீர்கள். புத்திசாலித்தனமாக நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் இருக்கும் சிக்கலை அழகாக அவிழ்த்து விடுவீர்கள். வாடிக்கையாளர்களை கவருவதில் இந்த வாரம் உங்களுக்கு பெரிய அளவில் முக்கிய பங்கு இருக்கும். உங்களுடைய அழகு வசீகரம் எல்லாம் இந்த வாரம் கூடியிருக்கும். காரணம் திறமையான சிந்தனை, இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளுங்கள்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்பார்த்த பண வரவு கையை வந்து சேரும். கடன் சுமை குறையும். நிதிநிலைமை சீர்படும். சேமிப்பையும் ஓரளவுக்கு சரி கட்டி விடுவீர்கள். வேலையில் உங்கள் தலை மேல் பெரிய அளவில் சுமை இருக்கும். அதை எல்லாம் செய்து முடிப்பதற்குள் உடல் அசதி ஏற்படும். உடல் ஆரோக்கியம் கெட்டுப் போகவும் வாய்ப்புகள் இருக்கிறது. ஆகவே நல்ல சாப்பாடு நல்ல தூக்கத்தை இந்த வாரம் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எந்த அளவுக்கு வேலை முக்கியமோ அந்த அளவுக்கு ஆரோக்கியமும் முக்கியம். வியாபாரத்தை பொருத்தவரை கூடுதல் உழைப்பை போட வேண்டி இருக்கும். பார்த்துக்கோங்க, தினமும் ஓய்வுக்கு நேரம் ஒதுக்க மறக்கவே கூடாது. பெருமாள் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் இந்த வாரம் பொறுப்போடு நடந்து கொள்வீர்கள். எதிர்காலத்திற்கு முன்னேற்றத்திற்கு தேவையான சில சின்ன சின்ன விஷயங்களை செய்வீர்கள். சிக்கலில் சிக்கிக் கொள்ளாமல் உங்களை நீங்கள் பத்திரமாக பார்த்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரத்தை பொருத்தவரை சின்ன சின்ன பிரச்சனைகள் அவ்வப்போது வந்து போகும். அது சரி செய்யக்கூடிய பிரச்சனை தான். கவலைப்பட வேண்டாம். மற்றபடி ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உடல் பருமனாக உள்ளவர்கள் உடல் எடையை குறைக்க முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். மற்றபடி எல்லாம் உங்களுக்கு இந்த வாரம் சுமூகமாக தான் நடக்கும். முருகரை கும்பிடுங்கள் எந்த நல்ல காரியமும் உங்கள் கையை நழுவி போகாது.
Previous Post Next Post


Put your ad code here