இன்றைய ராசிபலன் - 19.05.2025..!!!


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். இந்த வாரத்தின் துவக்கமே உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். உற்சாகத்தோடு இருப்பீர்கள். வேளையிலும் வியாபாரத்திலும் நினைத்ததை விட உங்களுடைய திறமையை வெளிப்படுத்தி காட்டுவீர்கள். வருமானம் உயரும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி கிடைக்கும். தேவையற்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். பிள்ளைகளுடைய முன்னேற்றத்தால், பெற்றவர்கள் சந்தோஷம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் நல்ல மேம்பாடு இருக்கும். நீண்ட தூர பயணங்கள் நன்மையாக முடியும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் அதிகமாக ஆர்வம் காட்டுவீர்கள். பொதுப்பணிகளில் உங்களை நீங்களே ஈடுபடுத்திக் கொள்வீர்கள். மனநிம்மதியை அடைவீர்கள். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் கொஞ்சம் அனுசரணை தேவை. நீண்ட நாள் வாடிக்கையாளர்களை எல்லாம் பகைத்துக் கொள்ளக் கூடாது. கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் பொறுமையாக இருக்க வேண்டும். முன் கோபம் வந்தாலும் அதை வெளிக்காட்டக் கூடாது. அதிகமாக பேசக்கூடாது. உறவுகளோடு கவனமாக பழக வேண்டும். நீங்களாக எந்த பிரச்சினைக்கும் போகாதீங்க. நீங்க நல்லது செய்தால் கூட அது பிரச்சினையில் முடிவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. கவனம் தேவை.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்கள் இன்று முன்னேறுவதற்கு அயராது உழைப்பீர்கள். செய்யும் வேலையில் வியாபாரத்தில் சாதனை படைப்பீர்கள். லாபம் உயரக்கூடிய நாள். புகழ் கிடைக்கக்கூடிய நாள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் சரியாகும். குடும்பத்தில் மன நிம்மதி பிறக்கும். இந்த நாள் இனிய நாளாக அமைந்ததற்கு இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மனது நெகிழும் அளவுக்கு பாராட்டுகள் கிடைக்கும். மனதிற்கு பிடித்தவர்களை கை பிடிப்பீர்கள். வீட்டில் சுப செலவுகள் ஏற்படும். சந்தோஷம் பிறக்கும். நிதி நிலைமை கொஞ்சம் ஏற்ற இறக்கத்தோடு காணப்படும். சில பேருக்கு கடன் வாங்கக் கூடிய சூழ்நிலை உண்டாகும், ஜாக்கிரதை.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் நல்ல நாளாக இருக்கும். முன்கோபத்தை எல்லாம் விட்டுவிட்டு ஒரு பணிவுடன் நடந்து கொள்வீர்கள். எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் உங்களிடத்தில் வெளிப்படாது. வியாபாரத்தில் வேலையில் இருந்து வந்த டென்ஷன் எல்லாம் குறையும். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று நலமான சுகமான நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகள் எல்லாம் சுறுசுறுப்பாக நடக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். பொன் பொருள் சேர்க்க இருக்கும். கடன் சுமை குறையும். நீண்ட தூர பயணத்தின் போது மட்டும் கவனமாக இருக்கவும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று வேலையில் கவனமாக இருக்க வேண்டும். கவனக்குறைவோடு செய்யக் கூடிய வேலைகள் பிரச்சனைகளில் கொண்டு போய் நிறுத்தி விடும். சோம்பேறித்தனம் வேண்டாம். நேரத்தை அனாவசியமாக செலவு செய்ய வேண்டாம். கைப்பேசி பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள். மூன்றாவது நபர் விஷயத்தில் தலையிடாதீர்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நன்மை நடக்கும். புது மனிதர்களின் சந்திப்பு நல்ல அனுபவங்களை கொடுக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கவனமாக இருக்கவும். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பில் அக்கறை காட்டுங்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று காலையில் எழுந்தது முதல் சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டும். ஒரு நிமிடத்தை கூட வீணடிக்க கூடாது. முக்கியமான வேலைகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட வேண்டாம். நேரத்திற்கு ஆரோக்கியமான உணவை சாப்பிடவும். நேரத்திற்கு தூங்கி விடுங்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளுடைய எதிர்காலத்திற்கு தேவையான விஷயங்களை எல்லாம் பார்த்து பார்த்து செய்வீர்கள். சேமிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். நிதி நிலைமை சீராகும். மனதிற்கு நிம்மதி கிடைக்கும்.
Previous Post Next Post


Put your ad code here