மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கவனம் தேவை. பணம் சம்பந்தப்பட்ட, கணக்கு வழக்குகளிலும் சரி, உங்களுடைய வேலை சம்பந்தப்பட்ட விஷயத்திலும் சரி, வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் சரி, அலட்சியமாக இருந்தால் சின்ன சின்ன இழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கவனமாக செயல்படுங்கள். கைபேசியை அதிக நேரம் பார்க்க வேண்டாம். கவனத்தை சிதற வைக்க வேண்டாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத பணவரவு காத்துக் கொண்டிருக்கிறது. வேலையில் எதிர்பாராத பாராட்டும் கிடைக்கும். உங்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள். முன்னேற்றம் அடையக்கூடிய நாள். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்களும் விலகும். நன்மை நடக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் அதிகமாக இருக்கும். ஒரு வேலையை உருப்படியாக செய்ய முடியாது. எல்லோரும் உங்களுக்கு தொந்தரவு கொடுக்க தான் காத்துக் கொண்டிருப்பார்கள். எதிரிகளை போராடி சமாளிக்கவே பாதி நேரம் சரியாகிவிடும். வாராகியை கும்பிட்டு இந்த நாளை துவங்குங்கள். ஒரு பாதுகாப்பு கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதியான நாளாக இருக்கும். உங்களுடைய வேலையில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் வரக்கூடிய பிரச்சனைகளை நீங்களே சரி செய்து கொள்வீர்கள். பெருசாக எந்த ஒரு பாதிப்பும் இருக்காது. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மன நிம்மதி கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். திறமைகள் வெளிப்படும் நாளாக இருக்கும். நல்ல பெயர் கிடைக்கும். நீண்ட தூர பயணத்தின் மூலம் நன்மைகள் உண்டாகும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நன்மை நடக்கும். நீண்ட நாள் வார கடன் வசூலாகும். பொன் பொருள் சொத்து சேர்க்கையும் இருக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன நிறைவு இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் என்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உற்சாகத்தோடு இருப்பீர்கள். முகத்தில் ஒரு சிரித்த மளர்ச்சி காணப்படும். உங்களை பார்க்கும் போது சோகமாக இருப்பவர்கள் கூட, சந்தோஷமாக மாறிவிடுவார்கள். உங்களைப் போல வாழ வேண்டும் என்று நிறைய பேருக்கு ஆசை வரும். அடுத்தவர்களுக்கு இன்று நீங்கள் முன் உதாரணமாக திகழப் போடுகிறீர்கள். உங்களுடைய வேலை எல்லாம் ஓஹோன்னு நடக்கும் கவலைப்பட வேண்டாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு அதிகமாக இருக்கும். காலை எழுந்தது முதல் இரவு தூங்க செல்லும் வரை உழைப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பீர்கள். உடல் அசதி ஏற்படும். வேலைக்கு நடுவே கொஞ்சம் ஆரோக்கியத்தை பார்க்கவும். சரியான நேரத்தில் சாப்பிடுவது ரொம்பவும் நல்லது. வீட்டில் இருக்கும் பெண்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் இருக்கும். நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். வீட்டில் விருந்தாளிகளின் வருகையால் சில பேருக்கு அலைச்சல் உண்டாகலாம். வேலை சுமை அதிகரிக்கலாம். ஏதாவது ஒரு வகையில் உங்களுடைய அன்றாட வேலை கெட்டுப் போக வாய்ப்பு உள்ளது. புது வேலை உங்களைத் தேடி வரும். பாத்துக்கோங்க. கவனமாக இருந்துக்கோங்க.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பொசுக்கு பொசுக்கு என்று கோபம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆனால் கோபத்தை வெளி காட்டக் கூடாத சூழ்நிலையில் சிக்கி இருப்பீர்கள். எதிரிகளின் மூலம் பிரச்சனை, சொந்த பந்தங்களுடன் பிரச்சனை, என்று இன்றைய நாள் கொஞ்சம் கடுப்பாகத்தான் செல்லும். மாலை நேரத்தில் தலைவலி பிபி வருவதற்கு கூட வாய்ப்பு உள்ளது கவனமாக இருந்து கொள்ளுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று லேசான மன சஞ்சலம் இருக்கும். அடுத்தவர்களை பற்றி சிந்தித்துக்கொண்டே இருப்பீர்கள். யார் என்ன சொல்லிவிடுவார்களோ, என்று உங்களுடைய சுதந்திரத்தை பறிகொடுப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. அடுத்தவர்களை பார்த்து கொண்டு இருந்தால், நம்முடைய வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நன்மைகள் நடக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். கடன் சுமை குறையும். வீட்டில் பொன் பொருள் சேர்க்க இருக்கிறது. குழந்தைகளுக்கு பிடித்த பொருட்களை வாங்கிக் கொடுத்து மகிழ்வீர்கள். மாலை நேரத்தில் குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செல்லவும் வாய்ப்புகள் இருக்கிறது. இந்த நாள் சந்தோஷம் நிறைந்த நாள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்வீர்கள். எவ்வளவு வேலை வந்தாலும் சரி, சமாளித்து விடுவீர்கள். அடுத்தவர்கள் உங்களை எவ்வளவு தான் அடித்து நொறுக்கினாலும் சரி, அதாவது வேலை சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொடுமை செய்தாலும், அதை தாங்கும் அளவுக்கு உங்களுடைய மன உறுதி இன்று இருக்கும் நிறைய கஷ்டங்கள் வரும். நிறைய அனுபவங்கள் கிடைக்கும். இந்த நாள் இறுதியில் நிம்மதியையும் கடவுள் உங்களுக்கு கொடுப்பார் கவலைப்படாதீங்க.
Tags:
Rasi Palan