இன்றைய ராசிபலன் - 23.05.2025..!!!


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். நண்பர்களை கூடவே வைத்துக் கொள்ளுங்கள். புதிய மனிதர்களின் நட்புறவு கிடைத்தாலும் சந்தோஷம்தான். வேலையிலும் வியாபாரத்தையும் நிதானதோடு செயல்படுங்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசாமல் இருந்தால் நல்லதுக்கு மேல் நல்லது நடந்து கொண்டே இருக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று துணிச்சல் அதிகமாக இருக்கும். யாரையெல்லாம் என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை எல்லாம் கேட்டு முடித்து விடுங்கள். கடவுள் உங்களுக்கான சான்சை கொடுத்திருக்கிறார். வாய்ப்பு வரும்போது மனதில் பட்டதை வெளியில் பட்டு என்று பேசி மனதை நிம்மதியாக்கிக் கொள்ள வேண்டும் அவ்வளவுதான்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதுசாக வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று உங்களுடைய வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். தேவையான விஷயங்களை எல்லாம் சரியாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் வீட்டில் இருக்கும் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும். உடலுக்கு சூடு தரும் பொருட்களை சாப்பிட வேண்டாம்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பெயர் தேடி வரும். பாராட்டுக்கள் கிடைக்கும். வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். நாலு பேர் மத்தியில் தலை நிமிர்ந்து நடக்கும் அளவுக்கு உங்களுக்காண மதிப்பும் மரியாதையும் உயரும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று லாபமான நாளாக இருக்கும். புதிய முதலீடுகளை மேற்கொள்ளலாம். கடன் சுமையிலிருந்து வெளிவந்து விடுவீர்கள். புதுசாக சீட்டு கட்டுவது, நகை சீட்டு போடுவது இது போன்ற விஷயங்களை துவங்கினாலும், எதிர்காலத்தில் அது நல்ல லாபத்தை கொடுக்கும். இன்று கணவன் மனைவி மட்டும் கொஞ்சம் விட்டுக் கொடுத்து நடக்கவும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் முன்கோபம் வரும். ஆகையால் சின்ன சின்ன பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுங்கள். கூடுமானவரை கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டாலே போதும். இந்த நாள் இனிமையான நாளாக அமையும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். அந்தந்த வேலைகள் அந்தந்த நேரத்தில் சரியாக நடக்கும். வியாபாரத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பாட்னரோடு கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். மற்றபடி வண்டி வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனத்தோடு இருப்பது நல்லது.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் இருக்கும். அடுத்தவர்களுடைய வாழ்க்கையை பார்க்கும் போது நாமும் இப்படி வாழலாம் என்று தோணும். செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். சில பேர் கடன் வாங்கி செலவு செய்வீர்கள். இன்றைய நாள் கொஞ்சம் மந்தமாகத்தான் இருக்கும். அனுசரித்து செல்லுங்கள் இறை வழிபாடு மேற்கொள்ளலாம்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று ஆக்கபூர்வமாக நிறைய நல்ல விஷயங்களில் ஈடுபடுவீர்கள். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். புதுசாக வீடு மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல வீடு கிடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கவனத்தோடு நடந்து கொண்டால் போதும். கடன் வாங்குவதை குறைத்துக் கொண்டால் மேலும் நன்மைகள் நடக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மனது நிம்மதியை தேடி அலையும். சில பேர் ஆன்மீக ரீதியான சுற்றுலா செல்லவும் தயாராகுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை இருக்கும். நல்ல பெயர் கிடைக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்வீர்கள். வேலையில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். எப்படியாவது வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று நடத்தும் போராட்டத்தில் வெற்றி காண்பீர்கள். தேவைக்கு ஏற்ப வருமானம் பெருகும்.
Previous Post Next Post


Put your ad code here