இந்த வார ராசிபலன் 26.05.2025 முதல் 01.06.2025 வரை..!!!


மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றின சிந்தனை அதிகமாக இருக்கும். குடும்ப நலனுக்காக இந்த வாரம் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தை பொருத்தவரை எவ்வளவு உழைப்பை முதலீடாக போடுகிறீர்களோ அவ்வளவு லாபத்தை எடுக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். செலவுகளை குறைப்பது எதிர்காலத்திற்கு நல்லது. இந்த வாரம் வீண் விரைய செலவுகளுக்கு வாய்ப்பு உள்ளது. தினமும் அம்மன் வழிபாடு செய்வது மனதிற்கு நிம்மதியை கொடுக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் இன்று வெற்றி அடையக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் சரியாகும். செலவுகள் குறையும். சேமிப்பு இரட்டிப்பாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். தினம்தோறும் விநாயகர் வழிபாடு நன்மையை தரும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மனதில் சந்தோஷம் இருக்கும். சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். உற்சாகத்தோடு இருப்பீர்கள். உங்களுடைய முகத்தில் கொஞ்சம் கூட சோர்வு தென்படாது. வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் இருக்கும். கலைத்துறையினருக்கு இந்த வாரம் புகழ்ச்சி கிடைக்கும். கடன் சுமை குறையும். மன பாரம் இல்லாமல் இரவு நிம்மதியான தூக்கத்தையும் பெறுவீர்கள். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். கூடுதல் நன்மை கிடைக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். செலவை குறைத்து சேமிப்பை அதிகரிக்க வேண்டும். தேவையற்ற பிரச்சனைகளில் மூக்கை நுழைக்க வேண்டாம். நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். வேளையிலும் வியாபாரத்திலும் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும். கணவன் மனைவிக்குள் ஒளிவு மறைவு வேண்டாம். தினமும் ஹனுமன் வழிபாடு செய்வது மனதிற்கு தைரியத்தை கொடுக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று லாபகரமான நாளாக இருக்கும். எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்புக்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தில் முதலீடு செய்யலாம். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழலாம். பொன் பொருள் சேர்க்கைக்கு நல்ல ராசியான வாரம் இது. வேலையில் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். புது வேலையை தேடுவதை விட, இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வதில் புத்திசாலித்தனத்தை காட்ட வேண்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவில் லாபம் இருக்கும். புதிய நண்பர்களின் வரவு புத்துணர்ச்சியை கொடுக்கும். தினமும் முருகர் வழிபாடு நன்மை செய்யும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரும் வாரமாக இருக்கப் போகிறது. தலைப்போகும் அளவிற்கு பிரச்சனை வரும். ஆனால் அந்த பிரச்சனைகளை சரியாக்க, கடவுள் உங்களுக்கு தக்க சமயத்தில் உதவி செய்வார். பிரச்சனைகளை கண்டு பயந்து விடாதீர்கள். கடவுள் உங்களை சோதிக்க தான் பிரச்சனையை கொடுக்க போகின்றார். கடவுளின் மீது முழு நம்பிக்கை வைத்து இந்த வாரத்தை கடந்து சென்றால், நீங்கள் பெரும் பாக்கியசாலியாக இருப்பீர்கள். பிரச்சனைகள் வந்தால் உண்மையை பேசவும். பொய் பேசி தப்பித்துக் கொள்ள வழியை தேடாதீர்கள். குறுக்குப் பாதையை தேர்ந்தெடுக்காதீர்கள். தினமும் நரசிம்மரை கும்பிட்டால் நன்மை நடக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் தரும் நாளாக இருக்கப் போகிறது. பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் முதலீடு செய்ய புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வங்கிக் கடன் முயற்சி செய்யலாம். எதுவாக இருந்தாலும் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உங்கள் சக்திக்கு மீறி எதையும் செய்யாதீர்கள். அகல கால் வைக்காதீர்கள். பெரியவர்களது ஆலோசனையை கேட்டு நடப்பது நல்லது. எதிரிகளால் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. தினமும் வாராஹி அம்மனை கும்பிடுங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தடைகள் தகர்க்கப்படும் வாரமாக இருக்கப் போகிறது. நீண்ட நாட்கள் முயற்சி செய்து தோல்வியுற்ற விஷயங்களை இன்றைய தினம் கையில் எடுக்கலாம். அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்த அளவு நன்மைகள் நடக்கும். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகளை துவங்கலாம். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். வாரா கடன் வசூல் ஆகும். சொத்து சேர்க்கையும் இருக்கிறது. மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடை விலகும். தினமும் விநாயகரை கும்பிட்டால் நன்மை நடக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வைக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனம் தேவை. நண்பர்களோடு சேர்ந்து நேரத்தை அனாவசியமாக செலவு செய்யக்கூடாது. குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே உங்களுடைய வேலையை முடிக்க வேண்டும். கைபேசி பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்களை பற்றி புறம் பேசாதீர்கள். மனதிற்குள் ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லுங்கள். நல்லது நடக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திடீர் திடீரென்று வேலை பளு உங்கள் தலைமேல் விழும். ஓய்வு எடுப்பதற்கு நேரமே இருக்காது. பம்பரம் போல சுழன்றிக்கொண்டே இருப்பீர்கள். உடல் சோர்வும் ஏற்படும். நிறைய தண்ணீர் குடியுங்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நீண்ட தூர பயணத்தை கூடுமானவரை தவிர்த்துக் கொள்வது நல்லது. பெரியவர்கள் வீட்டில் இருந்தால் அவர்களுடைய நலனில் கொஞ்சம் அக்கறை காட்டவும். சொத்து வாங்குவது விற்பது போன்ற விஷயங்களை அடுத்த வாரம் தள்ளி வைத்துக் கொள்ளுங்கள். தினமும் துர்கை வழிபாடு உங்களுக்கு நன்மையை தரும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இந்த வாரம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். உங்களை ஏமாற்ற யாராலும் முடியாது. வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன எதிரிகள் உருவாக வாய்ப்புகள் உள்ளது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. யாரை நம்பியும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். வண்டி வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். உங்களை சுற்றி நீங்களே ஒரு வட்டத்தை போட்டுக்கொண்டு அதற்குள் வாழ்வீர்கள். அந்த வட்டத்தை மீறி யாராலும் உங்களை தொட முடியாது. தினமும் மகாலட்சுமி வழிபாடு செய்வது நன்மையை தரும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் இந்த வாரம் பல நாள் பிரச்சனையில் இருந்து விடுபடக்கூடிய வாரமாக இருக்கப் போகிறது. எதிலும் துணிவோடு செயல்படுவீர்கள். பேச்சில் திறமை வெளிப்படும். அடுத்தவர்கள் செய்த தவறை சுலபமாக கண்டுபிடித்து விடுவீர்கள். இதனால் உங்களுக்கு புது எதிரிகள் உருவாக வாய்ப்புகள் இருக்கிறது. வேலையிலும் வியாபாரத்திலும் கவனமாக இருக்க வேண்டும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். பேச்சை குறைப்பதன் மூலம் நிறைய நற்பலன்களை அடையலாம்.  பெரிய அளவில் நல்லது நடக்கும்.
Previous Post Next Post


Put your ad code here