கண்டி, அலதெனியா பகுதியில் பஸ் ஒன்று வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்துள்ளனர்.
குலுகம்மன பகுதியில் நேற்றிரவு இந்த விபத்து சம்பவித்துள்ளது.
குலுகம்மன பகுதிக்கு சுற்றுலாச் சென்றுள்ள பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்தவர்களில் 15 வயதுக்குட்பட்ட ஒன்பது குழந்தைகள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் காயமடைந்தவர்கள் பேராதனை மற்றும் கண்டி வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரேக் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Tags:
sri lanka news