வடக்கு மாகாண பிரதம செயலாளராக தனுஜா முருகேசன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் நேற்று(20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அவருக்கு வழங்கப்பட்டது.
இலங்கை நிர்வாக சேவை மூத்த அதிகாரியான அவர் தனது கடமைகளை இந்த வாரம் ஏற்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை காலமும் வடக்கு மாகாண பிரதம செயலாளராக செயற்பட்ட இளங்கோவன் அண்மையில் ஒய்வு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tags:
sri lanka news