கொழும்புத்துறையில் மூச்சு விடக் கஷ்ப்பட்டு இரத்த வாந்தி எடுத்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
இதில் கொழும்புத்துறை சேர்ந்த தங்கவேல் கலைச்செல்வன் (வயது-42) என்ற இளம் குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.
மேற்படி நபர் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (20) அதிகாலை 4.00 மணியளவில் மூச்சுவிடக் கஷ்டப்பட்ட நிலையில் இரத்த வாந்தி எடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அதிகாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.
இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு அறிவுறுத்தினார்.