யாழில். அதீத போதையால் பறிபோன இளம் குடும்பஸ்தரின் உயிர்..!!!



போதைவஸ்து பாவித்ததன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் வெள்ளிக்கிழமை (9) பிற்பகல் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக ஒப்படைக்கப்பட்டவர் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சுப்பர்மடம் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய குடும்பஸ்தர் ஆவார்.

இந்த மரணம் தொடர்பில் சனிக்கிழமை (10) கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன் விசாரணை மேற்கொள்ளவுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here