கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றில் இருந்து விழுந்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவியின் மரணம் தொடர்பான விசாரணை கொழும்பு வடக்கு குற்றத் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பின் பிரபல தமிழ் பாடசாலை ஒன்றில் தரம் 11இல் கல்வி கற்றுவந்த குறித்த மாணவி, மன அழுத்தம் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவரது மரணத்துக்கு ஆசிரியர் ஒருவர் மீது குற்றம் சுமத்தி சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக காவல்துறை உத்தியோகப்பூர்வமான பதில் எதனையும் வழங்கவில்லை.
எனினும் சம்பவம் தொடர்பாக கொழும்பு வடக்கு குற்றத் தடுப்பு பிரிவு விசாரணைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளது.
Tags:
sri lanka news