
நுரையீரலில் கிருமித் தொற்று ஏற்பட்டு அக் கிருமித் தொற்றால் இரண்டு மாத ஆண் குழந்தை ஒன்று மரணம் அடைந்த சம்பவம் நீர்வேலி தெற்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் இச் அதே இடத்தைச் சேர்ந்த வருண் பிரதீப் என்ற இரண்டு மாத ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 14ஆம் திகதி சளி ஏற்பட்டதால் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். பின்னர் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை (15) யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதும் பிற்பகல் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமார் விசாரணை மேற்கொண்டார்.
பிரேத பரிசோதனையில் நுரையீரலில் கிருமித் தொற்று ஏற்பட்டு அக்கிருமித் தொற்றால் மரணம் ஏற்பட்டதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.