தக்லைப் படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் எவ்வளவு?





நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் இணைந்து உருவாக்கியுள்ள தக்லைப் திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு தற்போது தணிக்கை குழுவால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

படத்தின் நீளத்தையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது 2 மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடும் என தகவல் வெளியாகியுள்ளது.. மேலும் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர்.

இப்படம் வரும் ஜூன் 5ம் தேதி உலகமெங்கும் திரைக்கு வர உள்ளது. இதற்கு முன் வெளியாகியிருந்த டீசர் மற்றும் டிரைலர், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இப்படம் முதல் நாளிலேயே மிகப் பெரிய அளவில் வசூல் சாம்ராஜ்யம் அமைக்கும் என சினிமா வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
Previous Post Next Post


Put your ad code here