யாழில் போதைப்பொருள் பாவிக்க பணம் கொடுக்காத மனைவி - இளம் குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு..!!!



யாழில் போதைப்பொருள் பாவிப்பதற்கு மனைவி பணம் கொடுக்காததால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

அராலி - வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பஞ்சலிங்கம் வசந்தகுமார் (வயது 33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்று காலை இவ்வாறு மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு மனைவி, தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார்

இதனால் மனவிரக்தியடைந்த குறித்த குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Previous Post Next Post


Put your ad code here