கண்களில் கருவளையமா? கவலை வேண்டாம்.. இதோ தீர்வு..!!!




இன்றைய காலக்கட்டத்தில், வயதெல்லாம் பொருட்படுத்தாமல் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலருக்கும் கண்களுக்கு கீழ் கருவளையம் ஏற்படுகிறது. இது களைப்பு, தூக்கமின்மை, நீரிழப்பு, தோல் அழற்சி, அல்லது மெலனின் அதிக உற்பத்தி காரணமாக வரக்கூடும்.

இது ஓர் அழகு குறையாகவே காணப்படும். ஆனால் கவலைப்பட வேண்டாம்! உங்கள் வீட்டிலேயே உள்ள சில இயற்கை பொருட்களை பயன்படுத்தி இந்த பிரச்சனையை குறைக்கலாம்.

கற்றாழை ஜெல்:

கற்றாழையின் ஜெல்லை சுத்தம் செய்து, கருவளையத்தில் மென்மையாக தடவவும். 5–10 நிமிடங்கள் மசாஜ் செய்து, இரவு முழுவதும் வைத்திருக்கலாம். இது சருமத்தை ஈரமாகவும், குளிர்ச்சியுடனும் வைத்திருக்க உதவும்.

உருளைக்கிழங்கு + வெள்ளரி சாறு:

இரண்டும் சிறிதளவு துருவி சாறு எடுத்து, ஒன்றாக கலந்து கருவளையத்தில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள். இது தொற்றுகளை குறைத்து, தோலை பராமரிக்க உதவும்.

ரோஸ் வாட்டர்:

ஒரு சின்ன துணியை ரோஸ்வாட்டரில் நனைத்து, கண்களுக்கு கீழ் வைக்கவும். 15–20 நிமிடங்கள் வைத்திருக்கலாம். இது கண்களுக்கு சோர்விழக்க உதவுகிறது.

பால்:

பாலில் ஒரு பஞ்சு நனைத்து, கண்ணைச் சுற்றி தடவவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவுங்கள். பாலில் உள்ள லாக்டிக் அமிலம் கருமையை குறைக்கும்.
Previous Post Next Post


Put your ad code here