வீதியில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான கார்..!!!


இந்தியா - தமிழ்நாட்டின், திருவான்மியூர்- தரமணி வீதியில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

தரமணி- திருவான்மியூர் சாலையில் வாகனங்கள் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே, மெட்ரோ தொடருந்து பணிகளால் வீதியில் பள்ளம் ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், மெட்ரோ தொடருந்து நிர்வாகம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

தற்போது பள்ளம் ஏற்பட்ட இடத்திற்கு அருகே கழிவுநீர் கால்வாய் அமைப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் விபத்து குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.



Previous Post Next Post


Put your ad code here