நெடுந்தீவு குமுதினி படுகொலையின் 40 வது ஆண்டு நினைவேந்தல் இன்று காலை நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவுத் தூபியில் நடைபெற்றது.
நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி நிகழ்வு உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியும்,உயிரிழந்தவர்களின் நினைவாக மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
1985ம் ஆண்டு நெடுந்தீவு மாவிலித்துறை முகத்தில் இருந்து புங்குடுதீவு குறிகாட்டுவான் நோக்கி குமுதினி படகில் மக்கள் பயணித்த போது கடற்படையினரால் குழந்தை பெண்கள் அடங்கலாக உட்பட 36 பேர் நடுக்கடலில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
நினைவேந்தலில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் , நெடுந்தீவு பங்குத்தந்தை உள்ளிட்ட மத தலைவர்கள், உயிழந்தவர்களின் உறவுகள், பொது மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
படங்கள் - யாழ்.தர்மினி