வடக்கில் பல அரச உயரதிகாரிகளின் பதவிகள் பறிப்பு ; ஆளுநர் காட்டிய அதிரடி..!!!


பொதுமக்களால் தொடர்ச்சியாக வழங்கப்பட்ட பல்வேறு முறைப்பாடுகளுக்கு அமைய, திணைக்களத் தலைவர்கள் மற்றும் சில பிரதேசசபைச் செயலாளர்களின் பதவிகள் வடமாகாண ஆளுநரால் பறிக்கப்பட்டுள்ளன.

வடமாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளரின் பதவி உடன் நடைமுறைக்கு வரும் வகையில் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

அத்துடன், இரண்டு மாவட்டங்களின் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், ஒரு நகரசபைச் செயலாளர் மற்றும் மூன்று பிரதேசசபைச் செயலாளர்கள் ஆகியோரின் பதவிகள் பதவிகள் திரும்பப் பெறப்பட்டு, அவர்கள் வேறு திணைக்களங்களுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் மாற்றப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலருக்கு எதிராக விசாரணை ஆணைக்குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன என்றும் தெரியவருகின்றனது.
Previous Post Next Post


Put your ad code here